காவிரிக்காக தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் கைதான 85,000 பேர் விடுவிக்கப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட பல ஆயிரம் பேரை போலீசார் கைது செய்யவில்லை. கணக்கும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Special Correspondent

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் இன்று மறியல், கடையடைப்பு, ரயில் மறியல் என பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.

Special Correspondent

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முதலில் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மெரினாவை நோக்கி நடக்க தொடங்கவே காவல்துறையின் தடுப்புகளை மீறு மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு அமர்ந்து தலைவர்கள் மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்தனர்.

Special Correspondent

சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு விட்டு தலைவர்கள் கைதாகி விடுவார்கள் என்று காவல்துறை நினைத்திருந்த நிலையில் மறியல் தொடர்ந்தது. அதன் பின்னர் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை வலுக்கட்டாயமாக தூக்கி காவல்துறை வண்டியில் ஏற்றினார்கள்.

தலைவர்கள் ஏற்றப்பட்ட வண்டியை தொண்டர்கள் மறித்து வழி விடாமல் சாலையில் அமர்ந்தனர். அவர்களை அப்புறப்படுத்தி அந்த வண்டியை அனுப்பி வைத்தனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு புரசைவாக்கம் லட்சுமி மகாலில் அடைக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது ஆளுங்கட்சி தொழிற்சங்க ஊழியர்கள் அரசு பேருந்து களை இயக்கினர்.

இதனால் மற்ற தொழிற்சங்கத்தினர் ஆத்திரமடைந்து ஒரு சில இடங்களில் பேருந்துகளை இயக்க கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துகளை இயக்கிய போது பல இடங்களில் பேருந்து கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் 12 அரசு பேருந்துகள், வேலூரில் 21 பேருந்துகள் என தமிழகம் முழுவதும் 41 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

போராட்டத்தின்போது சென்னை, வேலூர், திருச்சி உள்பட பல இடங்களில் பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

Special Correspondent

சாலை மற்றும் ரெயில்மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று பிற பகுதியிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மூலக்கடையில் திமுக, மதிமுக, கொமதேக சார்பில் எருமை மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. தஞ்சையில் மத்திய வருமான வரித்துறை அலுவலகம் உள்ளே புகுந்து நாம்தமிழர் கட்சியினர் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். டெல்டா மாவட்டங்களில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, கரூர், அரியலூர், பெரம்பலூரில் 98 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 41க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைக்கப்பட்டன. புதுச்சேரியில் 5 தமிழக அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மற்றும் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 85,000 பேர் விடுவிக்கப்பட்டனர் என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட பல ஆயிரம் பேரை போலீசார் கைது செய்யவில்லை. கணக்கும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் 41 பஸ்கள் உடைக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக வேலூரில் 20 பஸ்கள் உடைக்கப்பட்டு உள்ளது, சென்னையில் 12 பஸ்கள் உடைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.