இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடரின் 11வது சீசன் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. சென்னை அணி, இரு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கியது. ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிக்கு எதிரான, ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

Special Correspondent

மும்பை அணிக்கு எவின் லீவிஸ் (0), ரோகித் சர்மா (15) ஜோடி சுமாரான துவக்கம் தர.

சூர்யகுமார் (43), இஷான் கிஷான் (40) அதிரடியாக் ஆடினார்கள். கடைசி நேரத்தில் பாண்ட்யா (22), குர்னால் (41) கைகொடுக்க, மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.

சென்னை சார்பில் வாட்சன் 2, சகார், இம்ரான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Special Correspondent

மும்பை அணிக்காக, 486.3 ஓவர்கள் பவுலிங் செய்த ஹர்பஜன், நேற்று சென்னை அணிக்காக முதல் ஓவரை, மும்பைக்கு எதிராக வீசினார்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. வாட்சன் (16), ராயுடு (22) ஏமாற்ற, ரெய்னா (4), தோனி (5) ஒற்றை இலக்கில் திரும்பினர். ஜடேஜா (12), சகார் (0) சொதப்ப, சென்னை அணி திணறியது.

நேற்று 20வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மும்பை வீரர் பாண்ட்யா, ரன் எடுக்க ஓடிய போது, வலது கணுக்கால் வலியால் அவதிப்பட்டார். இருப்பினும், மீண்டு வந்த இவர், வாட்சன், ரெய்னாவை அவுட் செய்தார்.

ஆனாலும் மனம் தளராத பிராவோ, தனி நபராக போராடினார். சிக்சர் மழை பொழிந்த இவர், மெக்லீனகனின் 18 வது ஓவரில் 20 ரன் எடுக்க, சென்னை பக்கம் விசில் சத்தம் அதிகமாக கேட்டது. பும்ராவின் 19 வது ஓவரில் 3 சிக்சர் அடித்த பிராவோ (68), அவுட்டானார்.

முஸ்தபிஜூர் வீசிய கடைசி ஓவரில் 7 ரன் தேவைப்பட்டன. தொடைப்பகுதி காயத்தால் அவதிப்பட்ட ஜாதவ், முதல் 3 பந்துகளை வீணடிக்க, ‘டென்ஷன்’ எகிறியது.

4வது பந்தில் சிக்சர் அடிக்க, ஸ்கோர் சமன் ஆனது. அடுத்த பந்தில் பவுண்டரி அடிக்க, சென்னை அணி 19.5 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து, 1 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஜாதவ் (24), இம்ரான் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.