ஆசிபாவின் இறுதி சடங்குகள் உள்பட அனைத்தையும் தடை செய்துவிட்டது இந்த கிராமம்”

Special Correspondent

நாடோடிகளான நாங்கள் எங்களின் பூர்வீக இந்த மலை கிராமத்தைவிட்டு செல்கின்றோம் என கூறுகிறார்கள் ஆசிபா வின் தாய் தந்தை.

10 கி.மி. தூரம் சென்று அடக்கி வந்த பிறகு,அந்த ஊரின் தண்ணீர் போக்குவரத்தை அர்எஸ்எஸ் இந்த்துவம் பேச்சை கேட்டு நிறுத்திவிட்டார்கள் ஆளும் பெரும்பாண்மை இந்து சொந்தங்கள்.

எங்க கிராமமும் சிரமம்படுகின்றது.என் மகளுக்கு இந்து-முஸ்லீம் என்றால் என்ன என்று தெரியாது...பசி தாங்க மாட்டாள் ஓங்கி அழுதுவிடுவாள்.. குதிரை தான் அவளுக்கு நண்பன்...அந்த குதிரைக்கு தெரியாது இவளின் நிலை...

கோயில் புனித தளம் என்று எனக்கு தெரியும்,அதனால் அங்கு சென்று பார்க்கவில்லை... 8பேர் சேர்ந்து எட்டு நாள் எட்டு வயது என் பிள்ளையை சீரழித்து பிறகும் இந்த கிராம்மே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதை விளங்க முடியவில்லை...

நாங்கள் என்ன பாவம் செய்தோம்..நாடோடியான நாங்கள் இங்கு இருக்க விருப்பமில்லை.. எங்கள் வீட்டில் சில தினங்களில் கல்யாணம் நிகழ்ச்சி இருந்தது,அவளுக்காக புது ஆடை வாங்கி தருகின்றேன் என்று கூறினேன்.. அது எப்போது இனி நடக்க வாய்ப்புகள் இல்லை என்று கண்ணிர் விட்டு அழுதபடியே தெரிவித்தனர் ஆசிபா வின் தாய் தந்தை.