மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் பயன்பாட்டில் இருந்தது என்று திரிபுரா முதல்வர் விப்லப் குமார் தேவ் நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள விஷயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Special Correspondent

திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் முன்னணியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்வராக பாஜகவைச் சேர்ந்த விப்லப் குமார் தேவ் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் பயன்பாட்டில் இருந்தது என்று திரிபுரா முதல்வர் விப்லப் குமார் தேவ் நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள விஷயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாநில தலைநகர் அகர்தலாவில் பொது விநியோகத் துறையை முழுவதும் கணினிமயமாக்குதல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கினை அவர் புதனன்று துவக்கி வைத்தார். அப்பொழுதுஅவர் பேசியதாவது:

இண்டர்நெட் மற்றும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகிய இரண்டும் லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன்னால் மகாபாரத காலத்திலேயே பயன்பாட்டில் இருந்துள்ளது.

இல்லை என்றால் மகாபாரதத்தில் மன்னன் திருதிராஷ்ட்ரனுக்கு, குருஷேத்திர போர்க்கள காட்சிகளை தேரோட்டியான சஞ்சயன் எவ்வாறு நேரடியாக காண்பித்திருக்க முடியும்?

அதற்கான கருவிகள் அப்பொழுது இருந்துள்ளது. இண்டர்நெட் இருந்துள்ளது... தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இருந்துள்ளது. ஐரோப்பியர்களோ அல்லது அமெரிக்கர்களோ இது தங்கள் கண்டுபிடிப்பு என்று கூறலாம். ஆனால் உண்மையில் இது நமது தொழில்நுட்பம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.