கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் குட்கா குடோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் விடிய விடிய சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Special Correspondent

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் டெல்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான தனியார் குடோன் இயங்கி வருகின்றது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் 40 ஆயிரம் சதுரடியில் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.

இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக், சாந்தி, விஐபி மற்றும் போதை தரும் குட்கா உற்பத்தி செய்யும். மிகப் பெரிய தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் போதை பாக்குகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்களும், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 79 மூட்டைகள் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு அறையில் வைத்து கண்ணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நேற்று இரவு 7 மணிக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்கெள் வெளி ஆட்கள் அனுமதிக்கப்பட வில்லை. தொடர்ந்து வெல்டிங் எந்திரங்களும் உள்ளே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனை தொடர்பாக சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தார்,

Special Correspondent

அப்போது, இந்த போதை பொருட்கள் தொடர்பாக ஏற்கனவே லைசென்ஸ் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இப்போது, தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் தயாரிப்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டியின்போது கூறுகையில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யகூடாது என இந்திய அரசு தடை செய்துள்ளது.

அதையும் மீறி தமிழகத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் துணையோடு, லஞ்சம் பெற்றுகொண்டு விற்பனை செய்து வருகின்றனர். அதனால் பல ஆயரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி, திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குட்கா தொடர்பாக சட்டமன்றத்தில் பல முறை பிரச்சினைகளை கிளப்பினார், தொடர்ந்து குட்கா விவகாரத்தில் எதிர்த்து வந்துள்ளார்கள்.

2 நாட்களுக்கு முன்பாக கூட சென்னை உயர்நீதிமன்றம் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க உத்திரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூட கோவையில் வடநாட்டை சேர்ந்த தொழில் அதிபர் பான்மசாலாவிற்கு அனுமதி பெற்று, தடைசெய்யப்பட்ட போதை பொருளை தயாரித்து வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்து தானும் பார்வையிட்டதாக தெரிவித்தார்.

தொடந்து சோதனை உத்திரவிட்டிருந்தது. மர்மமான முறையில் இந்த பங்களா இயங்கி வந்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்டிருந்தும் கூட குட்கா விற்பனை அமோகமாக விற்பனை நடைபெற்று கொண்டிருப்பதை காட்டுகின்றது. இதற்கு தமிழக அரசு துணை போகின்றது. உடனடியாக இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

ஆனால் காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு எந்த தகவலையும் தர மறுத்து விட்டார். இதற்கிடையே, வெளிப்படையான சோதனை நடைபெற வேண்டும், காவல்துறை தகவல்களை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுகவினர் குடோனின் வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுகவினர் குட்கா விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தளபதி முருகேசன், சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கபிலன், இளைஞரணி சுரேஷ்குமார், கணேஷ், வார்டு செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், மா.செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.