பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் பேரம் பேசிய வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

Special Correspondent

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா தமது கணவருக்கும் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.

முருகனின் நடத்தையில் சந்தேகம் இருந்தால் அதை கல்லூரி மாணவ மாணவிகளிடம் விசாரித்தாலே உண்மை தெரிந்துவிடும் என்று சுஜா கூறியுள்ளார்.

தமது கணவர் முருகனை சிக்கலில் மாட்டிவிட்டவர்கள் தடயங்களை சாதுர்யமாக அளித்துவிட்டதாக சுஜா குற்றம் சாட்டியுள்ளார். சிலர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைமறைவாகிவிடும்படி எச்சரித்ததாகவும் சுஜா தெரிவித்துள்ளார்.

பாலியல் பேரத்தில் நிர்மலா தேவியின் கூட்டாளிகளாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களை பலிகடா ஆக்க முயற்சி நடப்பதாக உறவினர்கள் குற்றம் சட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.