தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மேலும் மருத்துவ சேர்க்கையில் ஓசி பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

Special Correspondent

ஆனால் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த மே மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ படிப்பின் முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் நடைபெற இருந்த இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழக மருத்துவ கலந்தாய்வின் போது 69சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றப்படுவதால் ஓசி பிரிவை சேர்ந்த தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

அதனால் இடஒதுக்கீட்டை 50சதவீதமாக குறைக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த மாணவர்கள் முத்துராமகிருஷ்ணன் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Special Correspondent

மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில்,”தமிழகத்தில் இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மேலும் தமிழகத்தில் 69சதவீத இடஒதுக்கீடு என்ற சிறப்பு சட்டம் இயற்றப்பட்டதின் நகல் மற்றும் வழக்கு தொடர்பாக இதுவரை நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளின் நகல்கள் ஆகியவற்றை நாளை(இன்று) நீதிமன்றத்தல் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து தமிழகத்தின் 69சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

100 இடங்கள் கொண்ட கல்லூரியில் 150 பேர் படிக்க எவ்வாறு அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டதாக கூறி கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்தது.

தொடர்பு செய்திகள் : சமூக ஊடகங்கள் கட்டுபாடு விஷயத்தில் பல்டி அடித்த பாஜக அரசு