மும்பை லோயர் பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலை நடந்த தீ விபத்தில் 11 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Special Correspondent

கேளிக்கை விடுதியில் நடந்த விதிமுறை மீறலால் தான் விபத்தில் 14 பேர் பலியானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் கமலா மில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து நேற்று மும்பையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

இதில், விபத்து நடந்த கமலா மில் வளாகத்திலேயே உள்ள ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் ரகுவன்ஜி மில் வளாகம், போனிக்ஸ் வணிக வளாகம் மற்றும் பல பகுதிகளில் உள்ள ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அதிரடியாக இடித்து அகற்றினர்.