மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியாக பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். சாராய கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

Special Correspondent

நிகழாண்டில் மார்ச் 31 வரை தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வாகன மதிப்பில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் அதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தப் புதிய திட்டமானது, ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த ஜன. 22-ஆம் தேதி முதல் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 125 சிசிக்கு குறைவான வாகனத்தையே வாங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களும் வாங்கலாம். ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இன்று திங்கள்கிழமை (பிப்.5) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலும், பழகுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த சில நாள்களாக பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஓரிரு நாள்களே இருப்பதால் ஓட்டுநர் பழகுநர் உரிமம் வழங்குவதற்காக விடுமுறைநாளான சனிக்கிழமை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 8 மணிக்கே பெண்கள் கூட்டம் அலைமோதியது. சில அலுவலகங்கள் முன்பு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெண்கள் கூறுகையில், "தினமும் வேலைக்கு பேருந்தில் சென்று வருகிறோம். தற்போது டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டதால் இருசக்கர வாகனத்தில் செல்வது வசதியாக இருக்கும்; சரியான நேரத்துக்கும் வேலைக்குச் செல்ல முடியும். அரசு வழங்கும் மானிய விலை "ஸ்கூட்டி' வாங்க முடிவு செய்து அதற்கான உரிமம் பெற விண்ணப்பித்துள்ளோம்.

தற்போது பெண்களுக்கான இருசக்கர வானகங்கள் ரூ.50,000 முதல் ரூ.65,000 வரை விற்கப்படும் சூழலில், எங்களைப் போன்ற வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது" என்றனர்.

"அதேசமயம், விண்ணப்பிக்க இன்று திங்கள்கிழமை (பிப்.5) கடைசி நாள் என்பதால், மாற்றுத்திறனாளி மகளிருக்கு முறையாகச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே, குறைந்தபட்சம், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஒரு வார காலம் நீட்டிப்புச் செய்து அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் எங்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட 7000 கோடி ஒய்வுதிய தொகையில் எதுவும் திருப்பி தரமால் தமிழக அரசு விளையாடுகிறது என்று வேதனையுடன் போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.