’இறைவன் முன் அனைவரும் சமம்’ என கூறி வரும் ஈஷா, நன்கொடை என்கிற பெயரில் அதிக நன்கொடை கட்டியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தது சர்ச்சையை எற்படுத்தி வருகிறது .

Special Correspondent

ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் டெஸ்கில் அமர்ந்திருந்த பெண் நிறைய கேட்டகிரி இருக்கு “கங்கா 50,000 ரூபாய், யமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி 500 ரூபாய்!’’ என்று நதிகளின் பெயரில் பேக்கேஜ் விவரித்தார்.

Special Correspondent

’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?’ என்று வினவினால் . ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால். 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்!’’ என்று சினிமா தியேட்டர் விதவித க்ளாஸ் போல விவரித்தார்.

Special Correspondent

’’எங்க ஊர்ல இருக்குற ஈஷா யோகா சென்ட்டர்ல சொல்லும்போது, என்ட்ரியும், ருத்ராட்சையும் ஃப்ரீனுதான் சொன்னாங்க, வீடியோவில் பேசின சத்குருவும் அதான் சொன்னாரு. ஆனால், இங்க வந்து கேட்டால், 500 ரூபா இருந்தாதான் உள்ளேயே விடுவேங்குறாங்க. இல்லைன்னா வெளில தரையில் உட்கார்ந்துக்கோங்கனு சொல்றாங்க. எங்க ஊர்ல இருக்கும் சென்ட்டர்ல இருந்து ஈஷா யோகா மையம் ஏற்பாடு செஞ்ச பஸ்ல வந்திருந்த ஆளுங்களை உள்ள விட்டுட்டாங்க. அவங்களையும் கட்ட கடைசியிலதான் உட்கார வெச்சிருக்காங்க. சாமியைப் பார்க்கிறதைக்கூட காசாக்கிட்டாங்க!’’ என்று புலம்பிய வண்ணம் தரையில் அமர்ந்து ஹிந்துக்கள் பார்த்தனர்...

அங்கிருந்து அவ்வளவு பிரமாண்டமான ஆதியோகி சிலைகூட மசமசப்பாகத்தான் தெரிந்தது. இலவசப் பகுதியில் ஒரு எல்.சி.டி ஸ்க்ரீன்கூட இல்லை. எக்கி எக்கிப் பார்த்ததில் சோர்ந்துபோன பலர் அசதியில் சிவராத்திரி என்றுகூட பார்க்காமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள்.

'நதிகளை மீட்போம்' என்ற திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ஈஷா. ஆனால், புட்டியில் தண்ணீர் விற்பனை செய்யும் பன்னாட்டு தண்ணீர் நிறுவனத்தின் தயாரிப்புகளை நிகழ்வில் வழங்கியது, ‘நதிகளை மீட்போம்’ திட்டத்துக்கே முரணாக இருக்கிறதே என்று பதிவர்கள் சமூகவலைதலத்திலே பதிவிட்டு வருகின்றனர்...

விளம்பரம் மற்றும் டிக்கட் விலை மூலம் சுமார் 320 கோடி வந்திருப்பதாக பெயர் தெரிவிக்க விரும்பாத நிர்வாகி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Special Correspondent

சென்ற வருடம் பிரதமர் மோடி வந்து அதியோகி சிலையை திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடதக்கது.