தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்ட 30 நாள் போர் நிறுத்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு அவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

Special Correspondent

ஆனால், மிகப் பெரிய ஜிகாதி குழுக்களும் அவர்களின் கூட்டாளிகளும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் கீழ் வரவில்லை என்பதால் இது ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், ஐ.நா. யுத்த நிறுத்த தீர்மானத்தையும் மீறி சிரியாவில் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சிரியா நாட்டில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. சமீப காலமாக அங்குள்ள கிழக்கு கோட்டா பகுதியில் சிரியா நாட்டு அரசு நடத்தும் விமானத் தாக்குதல்களால் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

Special Correspondent

சிரியா நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 527 பேர் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 129 பேர் குழந்தைகள் என்பது சோகமான தகவல்.

ஆனாலும், இந்த தீர்மானத்தை சிரியா அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமை காலை கிழக்கு கோட்டா பகுதிகளில் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Special Correspondent

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மர்க்கேல் மற்றும் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் ஆகியோர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைத் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனாலும், ‘தீவிரவாதப் படைகள்’ மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருகிறோம் என சிரியா ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதப் படைகளுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்து வருவதாக சிரியா ராணுவம் குற்றம் சாட்டுகிறது .