பீஹாரில் 9 பள்ளி குழந்தைகள் மீது காரை ஏற்றி கொன்ற பா..ஜ. பிரமுகர் மனோஜ் பைதா மீது போலீசார் எப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Special Correspondent

பீஹாரின் முஷாபர்பூர் மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி அசுரவேகத்தில் வந்த கார் சாலையின் குறுக்கே நடந்து சென்ற பள்ளிக்குழந்தைகள் மீது மோதியது.

இதில் 9 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தனர். மோதிய கார் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. மேலும் கார் அனாதையாக விடப்பட்டிருந்தது. காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ. பிரமுகர் மனோஜ் பைதா மீது போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காங். தலைவர் ராகுல் கூறியது, பீஹாரில் முதல்வர் நிதீஷ் மதுவிலக்கை அமல்படுத்தியதாக கூறினார். ஆனால் அவர் கூட்டணி வைத்துள்ள பா.ஜ. பிரமுகர் குடி போதையில் தான் 9 குழந்தைகள் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார் என்றார்.