தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பிடித்து வைத்த 5000 கோடி ஓய்வூதிய தொகை ஆகியவற்றை உடனே வழங்குமாறு சென்னை பல்லவன் இல்லம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Special Correspondent

ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இனி தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று சென்னை சேப்பாக்கம் மசூதி தெருவில் உள்ள சிஐடியு சங்கத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுகல்லில் அதிமுக கொடியுடன் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களு்ம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் அதிமுக தொழிற்சங்கமே அண்ணா தொழிற்சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக போராட்டத்தை கைவிட்டுடுமாறு அறிவுறுத்திய உயநீதிமன்றம் தொழிலாளர்கள் 5000 கோடி வைப்பு நிதியை ஒரு தவணையில் உடனடியாக தருமாறு அறிவுறுத்தியது .

ஆனால் இதனை பற்றி பேச மறுத்த அதிமுக தமிழக அரசு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு இன்றுடன் திரும்பவிட்டால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தும் குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது .

பல இடத்திலே போலீஸ் அத்துமீறி தொழிலாளர்களை அடிப்பதும் நடைபெற்று வருவதாக வேதனையுடன் தொழில் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர் . இந்த நிலையில் பஸ் ஸ்டாண்ட் வெறிசோடி காணப்படுவதால் தமிழ்நாட்டு மக்களும் பரிதவித்து வருகின்றனர்.