சென்னை கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, 2 லட்சம் பணத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம், கூட்டாளி தினேஷ் சவுத்ரி கொள்ளையடித்து சென்றனர்.

Special Correspondent

அவர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். தேடுதல் வேட்டையில் நாதுராம், தினேஷ் சவுத்ரியின் உறவினர்கள் 4 பேரை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரியபாண்டியன் தலைமையில், அதே தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அதைத்தொடர்ந்து இரவில் நாதுராமை செங்கல் சூளை ஒன்றில் வைத்து பிடிக்க முயன்ற போது, இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

மோதலில் எதிர்பாராத விதமாக சக போலீஸ் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்த குண்டு பாய்ந்து இறந்ததாக ராஜஸ்தான் போலீஸ் தெரிவித்தது துப்பாக்கி குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்தார்.

Special Correspondent

முக்கிய குற்றவாளி நாதுராம் தன்னுடைய உறவினர்களுடன் தலைமறைவானார். ஆனால், முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் போலீசார் கைது செய்தனர்.

நாதுராமை பிடிக்க, ராஜஸ்தான் போலீசார் 3 தனிப்படைகளை அமைத்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் நாதுராமை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் வழக்கு போகும் தன்மை, ஆய்வாளர் முனி சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, சட்டம் என்ன சொல்கிறது என்பதை போலீஸ் தரப்பின் சார்ஜ் சீட் பார்த்த பிறகே சொல்ல முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...