சோடா பாட்டில் வீசுவோம் என்று பேசியதற்காக மன்னிப்பு கோரினார் சடகோப ராமானுஜ ஜீயர்.

Special Correspondent

ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாளை அவமதித்ததாகக் கூறி தொடர்ந்து இந்து அமைப்புகள் பல அவருக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.

வைரமுத்து இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனாலும், தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி நாமக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், "ஆண்டாளை அவதூறாக பேசிய வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து மன்னிப்பு கேட்கும்வரை நாம் அறவழியில் போராடுவோம்.

இந்தக்கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம்.. எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று பேசினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சோடா பாட்டில் வீசுவோம் என்று பேசியதால், இந்து மக்களின் மனம் புண்படும் என்று கருதியதால் ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்..