கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இராணுவ கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரதமர் மோடிக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை அடுத்து அவரது கருப்புக் கொடி காட்டி கண்டனத்தை தெரிவித்தனர்.

Special Correspondent

இதிலிருந்து தப்பிப்பதற்காக மோடியின் பயணத்திட்டம் சென்னைக்குள்ளேயே தரைவழியில் அல்லாமல் வான் மார்க்கமாக அமைக்கப்பட்டது. அப்படியும் விடாமல் பிரம்மாண்ட கருப்பு பலூனை மேலே அனுப்பியது திமுக.

அன்று ட்விட்டரில் #gobackmodi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக இருந்தது. அது உலகலெவலில் பேமஸானது. இது பலதரப்பில் விவாதத்தை ஏற்படுத்தவும் செய்தது.

Special Correspondent

தற்போது பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷா, தமிழக பாஜகவின் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வுக்காக சென்னைக்கு வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கு ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தது போல, தற்போது அமித் ஷாவின் வருகைக்கும் இந்திய அளவில் #gobackamitshah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி விட்டது .இது தமிழக பாஜகவினரை அதிர செய்துள்ளது.

Special Correspondent

பாஜக தலைவர் அமித் ஷாவின் தோற்றத்தின் அடிப்படையில் 'அம்மன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் நாகிரெட்டியுடனும் 'குணா', 'மகாநதி' ஆகிய படங்களை இயக்கிய நடிகர் சந்தான பாரதியுடனும் ஒப்பிட்டு மீம்ஸ்களை பரப்பினர். இதில் தமிழை காட்டிலும் ஆங்கிலத்தில் நிறைய மீமிஸ் வந்து உள்ளது குறிப்பிடதக்கது.

Special Correspondent

ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கும் அமித் ஷாவை தமிழக மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு துளைத்து எடுப்பதன் காரணம் தூத்துகுடி துப்பாக்கி சூடு மற்றும் 8வழி சாலை என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

தொடர்பு செய்திகள் : சர்ச்சையில் சிக்கிய பாஜக மத்திய அமைச்சர்