இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது திருமணத்துக்கு மகாத்மா காந்தி பரிசளித்த கைத்தறித் துண்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசளித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Special Correspondent

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார். தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சந்தித்து பேசியதை அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 3 மாதங்கள் கழித்து 1947-ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ராணி எலிசபெத்தின் திருமணம் நடைபெற்றது. அப்போது அவரது திருமணத்துக்காக மகாத்மா காந்தி தனது கையால் நெய்த கைத்தறி துண்டை திருமண பரிசாக அவருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த பரிசினை இத்தனை ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்த ராணி எலிசபெத், பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். அந்த துண்டின் மத்தியில் ஜெய்ஹிந்த் என குறிப்பிடப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விலைமதிப்பில்லா பரிசை மோடி என்ன செய்தார் என்று தெரியவில்லை என்றும் தெரிகிறது.

தொடர்பு செய்திகள் : தாய்லாந்து குகை: 13 பேரும் வெற்றிகரமாக மீட்பு