இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் 2017 ஆண்டிற்கான பொருளாதார பிரிவு அறிக்கையில் “யானை காப்பகங்களில் நகர்மயமாக்கல்” என்று தலைப்பின் கீழ் விரிவாக சொல்லி இருக்கிறது. அதில் மலை பகுதியை காக்கும் குழுவானது (Hill Area Conservation Authority) 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கபட்டது.

Special Correspondent

இந்த குழுவிடம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டிடங்களை கட்ட குறிப்பாக பூலுவாப்பட்டி பகுதியில் கட்டிடங்கள் கட்டுவது போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கோவை பூலுவாப்பட்டி பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. இந்த மையமானது இயற்கை சூழல் மிகுந்த காடுகளை அக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ந்து புகார் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் ஈஷா தரப்பு அதை மறுத்து வந்துருக்கிறது. இந்த நிலையில் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் ஈஷா மையம் செய்துள்ள ஆக்கிரமிப்பு குறித்து குறிப்பிட்டு சொல்லி இருக்கிறது.

கோவை மாவட்ட வனஅலுவலர் நடத்திய கள ஆய்வில் HACAவை கலந்து ஆலோசிக்காமல் 11,973 சமீ பரப்பளவில் முன்பு கட்டிய கட்டிடங்களுக்கு கிராம பஞ்சாயத்து அனுமதி வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக 1994 முதல் 2008 வரையான காலகட்டத்தில் ஈஷா மையம் பூலுவாப்பட்டி பஞ்சயாத்திடம் அனுமதி பெற்று 32,856 சதுர அடி பரப்பளவில் கட்டிடங்களை கட்டி இருக்கிறது.

69,193 சமீ, 52,393 சமீ, 3,34,331 சமீ இடத்தில் விளையாட்டு மைதானம், வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஒப்புதல் கோரியது.

இது குறித்து 2012 பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் விளக்கம் கேட்டும் ஈஷா தொடர்ந்து கட்டிடம் கட்டி வந்திருக்கிறது.

அதை தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈஷா மையம் கோரிய தடையில்லா சான்றுதழ் திருப்பி அனுப்பிய பின்னரும் கட்டிடம் கட்டுவதை தடை செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2012 ஆம் ஆண்டு கட்டிடம் கட்டும்போது அளிக்கப்பட்ட அறிக்கையின் பெயரில் நடவடிக்கை எடுக்க வனத்துறை தவறி இருக்கிறது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் இதே விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது.

தொடர்பு செய்திகள் : காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு