எதிர்கட்சி தலைவர் இன்று வெளிட்ட அறிக்கையில் பகிரங்கமாக அதிமுக அரசின் முதல்வரை கடுமையாக தாக்கியுள்ளார்.

Special Correspondent

“எஸ்.பி.கே” என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களையும், சில துணை நிறுவனங்களையும் உருவாக்கி அவற்றில் முதலமைச்சரின் சம்பந்தியும், இந்த ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் பங்குதாரர்களாக இருந்து கொண்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைத் தட்டிப்பறித்து, அ.தி.மு.க ஆட்சியில் இருவரும் ஏகபோகமாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

முதலில் துணை முதலமைச்சருக்கும், தற்போது முதலமைச்சருக்கும் பினாமியாகச் செயல்பட்டு வரும் செய்யாதுரை, முதலமைச்சரின் சம்பந்தி திரு சுப்ரமணியமும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே நெடுஞ்சாலைத் துறை கான்டிராக்டுகள் என்பது திரு எடப்பாடி பழனிசாமி அரசின் எழுதப்படாத கருப்பு விதி.

சமீபத்தில் 407 கோடி ரூபாய் மதிப்புள்ள செங்கோட்டை - கொல்லம் சாலை ஒப்பந்தப் பணி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை சுற்று வட்டாரச் சாலை ஒப்பந்தப் பணி, வண்டலூர் முதல் வாலாஜா ரோடு வரை 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்கும் ஒப்பந்தப் பணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறையின் 2000 கோடி மதிப்புள்ள பராமரிப்பு ஒப்பந்தப் பணிகள் என அரசாங்க ஒப்பந்தங்கள் அனைத்தும் “சுப்பிரமணியம்- செய்யாதுரை, நாகராஜன்” என்ற இரட்டையர் பங்கு பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கே வாரிவாரி வழங்கப்படுகின்றன. இந்த மாபெரும் மோசடி குறித்து உரிய ஆதாரங்களுடன் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளகிறேன்.

Special Correspondent

இந்நிலையில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் 80 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாகவே கைப்பற்றப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

30-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் சோதனையில் இருக்கின்றன என்பதும், இந்த செய்யாதுரை மற்றும் நாகராஜன் அலுவலகங்கள் அனைத்தும் ரெய்டுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதும் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறையின் நீண்ட நெடிய ஊழல் சரித்திரத்தின் சந்தி சிரிக்கும் சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் அமைந்திருக்கின்றன.

அதலில் திரு. எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகள் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது “எஸ்.பி.கே” கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை "ரெய்டு" நடைபெற்றுக் கொண்டிருப்பதை, பொது நலன் கருதி வரவேற்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்பு செய்திகள் : நேற்று கிறிஸ்டி இன்று எஸ்.பி.கே : அதிமுக அரசு ஒப்பந்ததாரர்களை தொடர்ந்து வேட்டை 100 கோடி பறிமுதல்