ராஜஸ்தானில் இறைச்சிக்காக பசுக்களை கடத்திச் சென்றதாக கூறி வியாபாரி ஒருவரை மீண்டும் ஹிந்து பசு காவலர்கள் கும்பல் அடித்து கொன்ற நிகழ்வு நாடு முழுவதும் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை அடுத்த லாலாவண்டியில் தான் இந்த கொலை நிகழ்த்தப்பட்டது. அக்பர் கான் என்ற ஹரியானா மாநில வியாபாரி பசுமாடுகளை வாங்கி கொண்டு வாகனம் மூலம் சொந்த ஊர்நோக்கி சென்று கொண்டிருந்தார். .

அவரை வழிமறித்த அர் எஸ் எஸ் கொள்கைவாதி ஹிந்து மத பசு பாதுகாவலர்கள் என்ற பெயரிலான குண்டர்கள் அவரை சூழ்ந்து நின்று சரமாரியாக தாக்கினார்கள். .

இதில் அக்பர் கான் அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இஸ்லாமிய மாட்டு வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Special Correspondent

தற்போது பசுவின் பெயரில் மீண்டும் படுகொலை நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய பல தலைவர்கள் இது போன்ற தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை என்று விமர்சித்தனர். .

இந்நிலையில் மறுநாளே வியாபாரி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு செய்திகள் : தொடரும் சாதிய தீண்டாமை அவிநாசி அதிர்ச்சி