சென்னையைத் தொடர்ந்து விழுப்புரம், ராமநாதபுரத்தில் 2 சிறுமிகள் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Special Correspondent

மேலும் 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 12 வயது சிறுமியை, செக்யூரிட்டிகள், லிப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பரம் உள்ளிட்ட 17 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல, விழுப்புரத் திலும் ஒரு சிறுமியை காதலித்த வாலிபர், நண்பர்கள் 7 பேருக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்தார். இதற்காக அவர் தினமும் பஸ்சில் செல்லும்போது வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த விக்கி( 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை விக்கி, வழுதாவூரை ஒட்டியுள்ள ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்று அங்கு ஆசைவார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை செல்போனில் படம் எடுத்ததாக தெரிகிறது. பின்னர் அந்த படத்தை சிறுமியிடம் காண்பித்து மிரட்டி பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

நண்பருக்கு விருந்தாக்கிய கொடூரம்: சிறுமியிடம் ஆபாச படத்தை வாட்ஸ்அப், நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி, தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளான். இதனை தனது நண்பர்களிடம் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளான். பின்னர் அந்த சிறுமியை வரவழைத்து அருகிலுள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளான். மேலும் 7 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி உறவினர்களிடம் தெரிவித்து கதறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் சிறுமியுடன் புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், வழுதாவூர் விக்கி, அவனது நண்பர்கள் உட்பட 8 பேர் கும்பல் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான வழுதாவூர் விக்கி உள்பட 8 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் , அண்ணா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி, 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் ராமநாதபுரம் பஜார் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு சில வாரங்களுக்கு முன் ரீசார்ஜ் செய்ய வந்தார். அங்கு ரூ.20க்கு ரீசார்ஜ் செய்ய சொல்லியுள்ளார். ஆனால், கடையில் பணியாற்றும் வாலிபர் ரூ.50க்கு ரீசார்ஜ் செய்து கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு, அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துக்கொண்டு அந்த வாலிபர், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 7 பேரையும் விடுதிக்கு வரவழைத்துள்ளார். அவர்களும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோ பதிவை காட்டி, சிறுமியை மிரட்டி மீண்டும், மீண்டும் அந்த விடுதி உட்பட பல இடங்களுக்கு வரவழைத்து 8 பேரும் பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. கும்பலின் கொடுமை தாங்க முடியாமல் அந்த சிறுமி, தனது பெற்றோருடன் நேற்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து கதறி அழுதபடியே புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக 363 (கடத்தி சென்று கற்பழிப்பு), 366 (பாலியல் பலாத்காரம்), 506(2) (சிறுமிக்கு பலாத்காரம்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் என 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், செல்போன் கடை ஊழியர்கள் அக்பர் அலி(27), அபுதாகீர்(26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

முன்னதாக சிவகங்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு சிறுமியை, உறவினர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், பிற அரசு அலுவலர்கள் உட்பட 16 பேர் தொடர் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, காலப்போக்கில் சிறிய அளவிலான நடவடிக்கையோடு நின்று போனது. தற்போது பக்கத்து மாவட்டமான ராமநாதபுரத்திலும் சிறுமி, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Special Correspondent

சென்ற் வாரம் மட்டும் நடந்த பாலியல் பலாத்காரம் விவரம் :

ஜூலை 17: சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளியான 7ம் வகுப்பு சிறுமியை கடந்த 7 மாதங்களாக பலாத்காரம் செய்த 17 பேர் கைது.

ஜூலை 18: திருவண்ணாமலையில் தனியார் லாட்ஜில் மயக்க குளிர்பானம் கொடுத்து ரஷ்ய பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர் கைது.

ஜூலை 18: விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாற்றுத்திறனாளி பெட்டிக்கடைக்காரர் கைது.

ஜூலை 22: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் கைது.

ஜூலை 22 : மதுரையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ஓய்வு பெற்ற எஸ்ஐ கைது.

நேற்று ராமநாதபுரத்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 8 பேர் சிக்கியுள்ளனர். இதில் 2 பேர் கைது.

நேற்று புதுச்சேரியில் 8 பேர் கொண்ட கும்பல், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளது.

தொடர்பு செய்திகள் : "பெண்களுக்கு பாதுகாப்பில்லை" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை