"நீட்" தேர்வை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நேரத்தில் பல திறமையான மருத்துவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே மத்திய அரசும் அகில இந்திய மருத்துவக்கவுன்சிலும் இந்த "நீட்" தேர்வை கொண்டுவந்துள்ளனர். இதனால் மாணவர்களின் திறமை வளரும் என்றெல்லாம் சிலாகித்தனர்.

Special Correspondent

ஆனால் இந்த தேர்வை நடத்தும் பொறுப்பை இதுவரை C.B.S.E எடுத்து, தேர்வுமையங்களில் குளறுபடி, பிராந்திய மொழிகளில் கேள்விகளை மொழிபெயர்த்ததில் குழப்பம் இப்படி மாணவர்களுக்கு சங்கடங்களுக்கு மேல் சங்கடங்களை கொடுத்தபடியே நடத்தி வந்தது.

.

சர்ச்சைகள் அதிகரித்ததையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் வரும் 2019 முதல் நீட் தேர்வு உட்பட JEE MAIN, GMAT, GPAT, UGC - NET போன்ற தேர்வுகளை தேசிய தேர்வு நிறுவனம் (NATIONAL TESTING AGENCY) என்ற அமைப்பு நடத்தும் என்றும்..

.

நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை அதாவது பெப்ரவரி மற்றும் மே மாதங்களில் கணினி மூலம் நடைபெறுமென்றும்...

இதனால் ஒரு முறை தேர்வெழுத வாய்ப்பில்லாதவர்கள் மற்றொரு முறை எழுதிக்கொள்ளலாம் என்றும், முதலில் பெப்ரவரி மாதம் எழுதுகிற தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெறவில்லையென்றால் மீண்டும் அதே நபர் அதற்கடுத்த மே மாதம் மற்றொரு தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு இரண்டு முறை தேர்வெழுதும் மாணவர்கள் இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளாரோ அந்த மதிப்பெண்ணை வைத்து மருத்துவக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஒரு அறிய கருத்தை சொல்லியிருந்தார்.

.

அமைச்சர் மேலே குறிப்பிட்டிருந்ததை ஊடகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் படித்து மாணவர்களும், பெற்றோரும் இனி நீட் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுமென்று புரிந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் அமைச்சர் தெரிவித்த இந்த தகவலையடுத்து இரண்டு மூன்று சந்தேகங்கள் இயல்பாய் வருகின்றன.

Special Correspondent

ஒன்று ப்ளஸ் டூ கல்வியின் ஆண்டு இறுதி அரசுத்தேர்வுகள் (C.B.S.E தேர்வோ அல்லது STATE BOARD தேர்வோ) பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் வரை நடைபெறுகிறது.

அவ்வாறு பள்ளி இறுதி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் எவ்வாறு பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக முடியும்? பள்ளி இறுதி தேர்வுக்கு படிப்பார்களா? அல்லது நீட் தேர்வுக்கு படிப்பார்களா?

.

இரண்ட நீட் தேர்வை ஓராண்டில் இரண்டு முறை தேர்வெழுதி எந்த தேர்வில் மதிப்பெண் அதிகமிருக்கிறதோ அந்த மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு மருத்துவக்கல்வி கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருப்பது சரியானதுதானா? இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை குறித்து விளக்கவேயில்லை.

.

மூன்றாவது மிக முக்கியமானது. முதலில் கணினி முறையில் நாடெங்கும் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த சூழலில் பலரும் அந்த தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுமென்று கருதிய நேரத்தில்...

நாடெங்கும் அனைத்து பகுதி மாணவர்களாலும் ஆன்லைன் மூலம் எழுத வாய்ப்பு கிடையாது. அதிவேக இணைய வசதி இன்னமும் நாடு முழுவதும் முழுமையாக சென்று சேராத நிலையில் ஆன்லைன் தேர்வு முறை சரிவராது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

.

இந்த நிலையில் நேற்று இதுகுறித்த விவாதத்துக்கு நாடாளுன்றத்தில் பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் "ஆன்லைன்" முறையிலான தேர்வு வேறு "கணினி" முறையிலான தேர்வு வேறு என்று ஒரு புது விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது..

Special Correspondent

"நாடு முழுவதும்பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள்உள்ளன. அனைத்துஇடங்களிலும், இணைய வசதி, சீராக இருக்கும்என, சொல்ல முடியாது. இதை மனதில் வைத்து, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, ஆன்லைன் தேர்வுகளாக அல்லாமல், கணினி முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

.

'ஆன்லைன்' எனப்படும், இணைய வசதியில் தேர்வை எழுதும்போது, விடைகள், உடனுக்கு உடன், தேர்வை நடத்தும் அமைப்புக்கு சென்று விடும்.ஆனால், கணினி முறையில், தேர்வுக்கான கேள்வி தாள்கள் ஏற்கனவே, தரவிறக்கம் செய்யப்பட்டு, கணினியில் தயாராக இருக்கும்.

.

மாணவர்கள், 'மவுஸ்' உதவியுடன்,அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். இதற்கு இணைய வசதி தேவையில்லை.அடுத்த ஆண்டு நடக்கஉள்ள, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகள், கணினி உதவியுடன் நடக்கஉள்ள முதல் தேர்வு என்பதால், அதில் மட்டும், வினாத்தாள் முறையிலும் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

.

தரவிறக்கம் செய்யப்பட்டு தயாராக இருக்கும் கேள்வித்தாள் எவ்வாறு ரகசியமாக அந்தந்த தேர்வுமையங்களில் பாதுகாப்புடன் இருக்கும்?

.

அதை தேர்வுமையத்தை சேர்ந்த யாரேனும் ஈமெயில் மூலம் அனுப்பிவிட இயலாதா?

.

அதை பிரிண்ட் எடுத்து வேண்டியவர்களுக்கு கொடுத்து விட முடியாதா?

.

பல்வேறு குறைகளோடு C.B.S.E நடத்தி வந்த இப்போதிருக்கிற OMR SHEETல் பதில்களை குறித்துக்கொடுக்கும் முறையே சிறந்ததாக படுகிறது.

C.B.S.E செய்த தவறுகளையும், குறைபாடுகளையும் களைந்து முறையாக தற்போதுள்ள ஆண்டுக்கு ஒரு தேர்வு, O.M.R SHEET ல் பதில்களை குறிப்பது போன்ற முறையிலான தேர்வு கூட சிறந்ததோ என்று தோன்றுகிறது.

.

அழகா இருக்கே... இது குதிரை குட்டியாகத்தான் இருக்கும்னு நினைச்சு வளர்த்துட்டு வரப்ப... ஒண்ணு ரெண்டு வருஷத்துக்குள்ள மூக்கு வெளிறி... கனைக்கிறப்பதான் தெரியும் இது "கழுதை"ன்னு .. அதுமாதிரிதான் இந்த நீட் தேர்வும்...

.

நீட் வந்த போது அது நாலு கால் பாய்ச்சல் காட்டும் குதிரைன்னு நினைத்தவர்கள் இப்போது ஒவ்வொரு விதமா அது நொண்டும் அவலத்தை வேதனையுடன் காணும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்களே என்ற ஐயம் வருகிறது.

தொடர்பு செய்திகள் : நீட் நீதிமன்றம் தமிழில் எழுதிய மாணவர்கள் தீர்ப்பு எதிரொலி எம்பிபிஎஸ் கவுன்சலிங் நிறுத்தம்