ஜெயலலிதா எதிர்த்த நீட்டை அவர் வழியில் செல்கிறோம் என்று கூறிய பாண்டியராஜன் , ஒ .பன்னிர் செல்வம் இருவருமே அவர்கள் தலைவி ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே மத்திய அரசு நீட்டிய இடத்திலே கையொப்ப்ம் இட்டு நீட்டை தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தது அறிந்ததே...

Special Correspondent

இந்த நிலையில் சென்ற வருடம் 1186 மார்க் எடுத்தும் நீட் தேர்வு வராத நிலையில் அனிதா மாணவி தற்கொலை செய்த நிலையில்..

நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கூலித் தொழிலாளியின் மகளான அவர் 12 வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. இந்த அதிர்ச்சி தாங்காமல் அந்த விரக்தியில் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். மன வருத்தத்தில் இருந்த அவர், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்ததாக அவரது தந்தை சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை.

ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த நிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீட் தேர்வு விரக்தியால் டெல்லி மாணவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் துவாராகா செக்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த அவர், தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்து கிடந்தார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை மாணவர் பர்ணவ் மெகந்திரதா எழுதியுள்ளதாகவும், நேற்று வெளியான முடிவில் அவர் தோல்வி அடைந்தது தெரிய வந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாணவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் நீட் தேர்வு முடிவு குறித்து பெற்றோரிடம் பொய் கூறி விட்டதாகவும் கூறியுள்ளார். மாணவர் பர்ணவின் அறையில் முடிச்சு போடப்பட்ட துப்பட்டா இருந்ததும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குமோ நீட் என்று பெற்றோர்களும் பீதியில் உள்ளனர்.

தமிழகத்தில் 91% பேர் +2 தேர்ச்சி அதிலும் 231 பேர் 1180 மேல...