அரியலூர் அனிதா, விழுப்புரம் ப்ரதீபாவை தொடர்ந்து திருச்சி சுபஸ்ரீ என்று அடுத்தடுத்து இளம் மாணவிகள் நீட் தேர்வின் முடிவுகளில் உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.

Special Correspondent

கண்ணனுக்கு சொந்த ஊர் துறையூர் அருகே உள்ள செல்லுலியூர். திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளை தலைவராகவும் உள்ளார்.

இவர் புதுக்கோட்டை டெப்போவின் பணிபுரிந்த காலத்தில் இருந்தே சுகாதாரதுறை விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். திருச்சியில் எல்.ஐ.சி காலனி, கே.கே.நகர் அடுத்த உத்தமர்சீலி என்று அடுத்து வீடுகளை மாற்றியும் கடைசியில் உத்தமர்சீலியில் வாடகை வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். இவருக்கு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இவரது மகள் சுபஸ்ரீ வயது17. சுபஸ்ரீ டாக்டருக்கு படிக்க வேண்டும் என சுபஸ்ரீயின் அம்மாவின் விருப்பம்.

அதனால் தான் திருச்சியில் 15 கல்வி நிறுவனங்களுக்கு மேல் வைத்திருக்கும் சௌடாம்பிகா கல்வி நிறுவனம் துறையூரில் நடத்தும் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். (இந்த பள்ளி நிர்வாகமே இந்த வருடம் முதல்முறையாக திருச்சியில் 3 இடங்களில் மிகப்பெரிய நீட் தேர்வுக்கான கோச்சிங் மையங்கள் நடத்தினார்கள்.

திருச்சி சுபஸ்ரீ தற்கொலையில் நீட் பத்தின சரியான புரிதல் இல்லாதால் அதை பயிற்சி நிறுவனங்கள் சொல்லிக் கொடுக்காததால் தான் மதிப்பெண் குறைவாக பெற்றதை தாங்கி கொள்ள முடியாமல் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்கிறார் சுபஸ்ரீயின் அப்பா கண்ணன்.

மேலும் அவர் தெரிவித்த விவரம்:

திருச்சியில் உள்ள கேர் நீட் கோச்சிங் சென்டரில் 25 நாளில் படிக்க 20,000 கட்டி சேர்த்து விட்டிருந்தேன். ஆனா அவ தெரிந்த கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல் எல்லாத்துக்கும் பதில் எழுதியதால் தான் அவள் மிக குறைந்த மார்க் வாங்கியிருக்கா! இதை கூட அந்த பயிற்சி நிறுவனம் முழுமையா சொல்லி கொடுக்காமல் இருந்துள்ளது.

சரி விடு... அடுத்த வருடம் படிக்கலாம் என்று நினைச்சேன். ஒரு வேலை நீட் தேர்ச்சி பெற்றால் சைனாவில் கொண்டு போய் 3 லட்சம் கட்டி டாக்டருக்கு படிக்க வைக்கலான்னு நினைச்சேன் அதனால் தான் அண்ணா யூனிவர்சிட்டியில் கூட அப்ளிகேசன் போடவில்லை.

இப்படி 24 மார்க் வங்கினதால் அப்சட் ஆயிட்டா. நா அவளுடைய மனசை தேத்த இன்னைக்கு சென்னைக்கு கூட்டிகிட்டு போய் தெரிந்த ஒருத்தர் மூலம் தடவியல்துறையில் சேக்கலான்னு நினைச்சேன்.

நேற்று இரவு கால பைரவர் கோவிலில் விளக்கு போடும் பூஜைக்கு நானும் என் மனைவியும் போயிட்டு வீட்டுக்கு போனோம். அவ ரூமில் சாத்திகிட்டு இருந்தா சாப்பிட வர சொல்லியும் ரொம்ப நேரம் வராதால தட்டி எழுப்ப முயற்சி பண்ணின போது தான். உள்ளே பெட்டில் சேர் போட்டு அதில் நைலான் கயிறு போட்டு தற்கொலை பண்ணிகிட்டா ஒரு பத்து நிமிசத்துல அவளை கீழே இறக்கி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு போறதுக்குள்ள இறந்துவிட்டாள். அவ வாழ்க்கையும் கெடுத்து எங்களையும் பரிதவிக்க விட்டுட்டு போயிட்டா என்று கதறினார்.

கண்ணன் வாடகை வீட்டில் இருப்பதால் சுபஸ்ரீயின் உடலை வீட்டுக்கு கொண்டு போக வீட்டுக்கு சொந்தகாரர் ஒத்துக்கொள்ளாதால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் நேர ஓயாமரி சுடுகாட்டிற்கு கொண்டு வந்து அரை மணி நேரம் வைத்திருந்து கடைசியில் பெற்றோர் உறவினர்களின் கதறல்களுக்கு நடுவே எரிந்து சாம்பல் ஆகி விடனாள் சுபஸ்ரீ.

ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரின் மகள் நீட் தேர்வுக்கு பலி ஆனதற்கு ஆறுதல் சொல்லுவதற்கு எந்த அமைச்சர்களோ, எம்.பி.களோ, நிர்வாகிகளோ யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் செய்திகள்