மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பையும் மீறி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக நேற்று கலந்துக்கொண்டார்.

Special Correspondent

விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி ‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ என்று விளக்கம் கொடுத்து பேசினார். இந்நிலையில் அவர் ஆர்.எஸ்.எஸ். போன்று சல்யூட் செய்யும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Special Correspondent

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பிற அதிகாரிகள் அணிந்து இருந்த கருப்பு நிற தொப்பியை பிரணாப் முகர்ஜியும் அணிந்து இருந்ததாக மார்பிங் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோன்று அவர் மார்பு பகுதியில் கையை உயர்த்தி ஆர்.எஸ்.எஸ். போன்று சலுயூட் செய்வது போன்றும் போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டு உள்ளது. உண்மையில் விழாவில் கலந்துக்கொண்ட பிரணாப் முகர்ஜி கருப்பு நிற தொப்பியும் அணியவில்லை, ஆர்.எஸ்.எஸ். போன்று சலுயூட் செய்யவுமில்லை.

சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் பரவிவரும் நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி, உண்மையில் நான் அச்சம் அடைந்தது இதுதான், என்னுடைய தந்தையை இதற்காகதான் எச்சரித்தேன். சில மணி நேரங்கள் கடந்த நிலையிலே பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மோசமான சூழ்ச்சி துறையானது முழு பணியை தொடங்கி உள்ளது,” என கூறிஉள்ளார்.

நேற்று பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக எச்சரிக்கைவிடுத்த சர்மிஸ்தா முகர்ஜி, பிரணாப் முகர்ஜி நாக்பூர் செல்வதால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை கட்டவிழ்த்து விடும்.

பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொள்கைகளை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக் கொண்டு விட்டதாக விஷம பிரச்சாரம் செய்யும். அதனால் தான் நீங்கள் அங்கு செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்கெனவே சில வதந்திகள் கிளம்பி விடப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் வேறு சில வதந்திகளும் வரலாம். நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக வதந்தி கிளப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் நான் அரசியலிலேயே இருக்கிறேன்.

அப்படி காங்கிரஸை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டால், நான் அரசியலை விட்டே வெளியேறி விடுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் செய்திகள் : சர்ச்சையை கிளப்பிய முன்னாள் முதல் குடிமகன் பிரணாப்