சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் மத்திய அரசு 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழி சாலைக்காக...

Special Correspondent

நடிகர் மன்சூரை தொடர்ந்து Piyush Manush மட்டும் அல்ல தங்கள் நிலங்களை தர மறுக்கும் 75 வயது மூதாட்டிகள் கூட கைது...

7500 ஏக்கர் விளைநிலம்,

500 ஏக்கர் வனப்பகுதி,

7 ஆறுகள், கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன்மலை,கவுதி மலை, வெடியப்பன்மலை,தீர்த்தமலை உடைக்கப்படும் அபாயம்.. ஐந்து மலைகளை குடைவதல் சுற்றுப்புற சீர்கேடு ஒருபுறம்...

இந்த 277 கிமீ ரோடு போட்டாலும் செங்கல்பட்டு வரைக்கும் தானே...

தாம்பரம் அடுத்த பெருங்குளத்தூர் 10 கோடி மதிப்பு ரயில்வே பாலம் 5 வருஷமாக அதிமுக அரசால் கட்டப்பட்டு கொண்டே இருக்கிறது... இந்த இடத்தில் மட்டுமே பரபரப்பான(peak hours) நேரத்தில் 30 நிமிடம் ஊர்ந்து சென்று கொண்டு இருக்க வேண்டி உள்ளது...

செங்கல்பட்டு முதல் சென்னை 55 கிமீ எப்படி பார்த்தாலும் 2மணி நேரம் ஆகும் .. இந்த 55 கிமி ஒரு மணி நேரத்தில் கடக்க பெங்களுரூ மாதிரி ஹைவே அண்ணாசாலை GST மீது போட வேண்டும்... இதற்க்கும் குறந்த பட்சம் 1000 கோடிகள் தனியே ஆகும்...

NHAI டேட்டா படி ஒரு கிமீ போட ஆறு வழி சாலைக்கு தற்போது 14 கோடி செலவு... இது நிலம் கையகப்படுத்துதல் உட்பட.

அரசின் சாலை என்பதால் அரசு நிர்னய விலை Land Guide Line value தான் கிடைக்கும் மார்கெட் விலை கூட கிடைக்காது... இருந்தாலும் இது எட்டு வழி சாலை ஆதலின் அதிகபட்சமாக 18 கோடி வைத்து கொள்வோம்...

277 கிமீ x 18 கோடி : 4986கோடிகள்... அப்போ பாக்கி 5014 கோடி யார் சுருட்டுகிறார்கள் என்பதை எடப்பாடி K. பழனிச்சாமியும் அவருடன் இணைந்து இயங்கும்தமிழிசை சௌந்தர்ராஜன் H ராஜா பாஜக தலைவர்களும் தானே சொல்ல வேண்டும்...ஆ

🔻சுற்றுப்புற சூழலும் கெடுகிறது...

🔻சுமார் 5000 கோடி ஊழல் குற்றசாட்டுக்கும் அரசிடன் தெளிவான பதிலும் இல்லை...

🔻நிலம் கொடுக்க மறுக்கும் நில உரிமையாளர்கள் போரட்டம் அதனால், சட்டம் ஒழுங்கு சீர் கேடு...

மொத்தத்தில் மிஸ்டர் எடப்பாடி சொன்னது போல பயண நேரம் குறைவதன் காரணிகள் எல்லாமே 100% நகைமுரண்... அல்லது அதிமுகவும் அவர்கள் பின்னாடி இருக்கும் பாஜவுக்கும் வளர்ச்சி தான் மிக முக்கியம் என்றால்...

ஸ்டெர்லைட் காட்டிலும், 277 எட்டு வழி சாலை காட்டிலும்,30 மணி நேரம் கப்பல் நேரத்தை மிச்ச படுத்தும் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் மிக்க லாபத்தை மட்டும் அல்ல அதிக பட்ச தொடர் வேலைவாய்ப்புகளை பெற்று தரும்...

காரணம் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட பெரிய கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் 400 கிமீ சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.இதன் பலன்கள் பல... அவற்றில் இதோ சில:

🌺 இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறையும் . அதனால் கணிசமான எரிபொருள் சேமிப்பு எற்பட்டு அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.

🌺 கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைந்து கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு நடக்கும . அதனால் எற்படும் inland water ways தேசிய நெடுஞ்சாலை லாரிகள் போக்குவரத்து குறைய மீண்டும் அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.

🌺 கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டால், அதனால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெருகும்.

இதற்க்கு பின்னரும் அதிமுக மைனாரிட்டி எடப்பாடி அரசு அப்படி தான் இத்தகைய 5000 கோடிகள் ஊழல் குற்றச்சாட்டு தரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழிப்பேன் என்றால்...

10000 கோடி ரோடு எடப்பாடி அதிமுக அரசின் கோமாளித்தனமான மெகா ஊழல் திட்டத்தை எதிர்த்து திமுக ஜனநாயகப்படி தமிழ் நாட்டின் அனைத்து சிறைகளையும் உடனே நிரப்பும் போராட்டத்தை விரைவாக அறிவிக்க வேண்டும்...

தொடர் செய்திகள் : டெல்லியும் தமிழ்நாடும்