தற்போது உள்ள நிலைமையை தங்களால் மட்டுமே கையாள முடியும் என்று தெரிவித்த ஸ்டெர்லைட் நிர்வாகம் ரசாயன கசிவு எதிரொலியாக பாதுகாப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

வழக்கமாக செய்யப்படும் கட்டாய பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ள குறைவான பணியாளர்களுக்கு அனுமதி அளிப்பதோடு, குறைவான மின்சாரத்தையும் தமிழக அரசு விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது..

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் கசிந்துவரும் கந்தக அமிலத்தை 2 நாட்கள் ஆன பின்னரும் அகற்றுவதில் சிக்கில் நீடித்து வந்தது..

இந்நிலையில் சேமிப்புக் கிடங்கில் ஏறத்தாழ 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் இருக்கலாம் என முதல் கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அதை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்..

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கந்தக அமிலத்தை பயன்படுத்தும் பல்வேறு தொழிற்சாலைகள் அந்த அமிலத்தை கொண்டு செல்ல தயாராக உள்ளன. உரிய பாதுகாப்புடன் கந்தக அமிலம் வெளியேற்றப்படும். ஆலைக்குள் மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் மூலம் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. .

அமிலக் கசிவை தடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். கசிவு மேலும் தொடராமல் இருக்க அங்குள்ள கந்தக அமிலத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்..

ஸ்டெர்லைட் நிறுவனம் செலுத்திய ரூ.100 கோடி வைப்புத் தொகையில் இருந்து இதுவரை மட்டும் ரூ.45 கோடி வட்டி வந்துள்ளது. அதில், ரூ.27 கோடி வரை பல்வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது. முந்தைய மாவட்ட ஆட்சியர், வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த அனுமதி கிடைத்த பின்னர், மீதியுள்ள தொகை செலவிடப்படும்..

ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பம் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். .

ரசாயன கசிவுக்கு பிறகு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினாலும், கசிவுக்கு 2 நாட்களுக்கு முன்பே மின் இணைப்பு கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் கடிதம் எழுதியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Special Correspondent

சீல் வைக்கப்பட்ட ஆலைக்குள் தங்கள் பணியாளர்களை நுழைக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் இதனால் எழுந்திருக்கிறது என்கிறார்கள் அவ்வூர் மக்கள்..

தொடர் செய்திகள் : அமிலக்கசிவை தடுக்க ஆலைக்கு மின்சாரம் கோரும் ஸ்டெர்லைட்