மத்திய அரசு பணிக்கான எஸ்.எஸ்.சி. வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Special Correspondent

மத்திய அரசு பணிக்காக எஸ்.எஸ்.சி. எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் சார்பில் சி.ஜி.எல்.பிரிவில் உள்ள பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

இதில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு நடப்பதற்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானாதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் பெருமளவு ஊழல் நடந்துளளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஊழல் விவகாரம் நாடுமுழுவதும் தேர்வு எழுதிய தேர்வர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.