கர்ப்பிணி உஷாவின் உயிரிழப்புக்கு காரணமான காமராஜ்க்கு சிறைகைதிகள் தாக்காமல் இருக்க மருத்துவமனையில் சேர்த்து சிறையிலே துப்பாக்கி ஏந்திய காவல்...

Special Correspondent

திருச்சி மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உஷாவின் தோழியின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்காக பரிசு (டேபிள் டாப் கிரைண்டர்) வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்த இவர்களை, துவாக்குடியில் தலைக்கவச சோதனை என்ற பெயரில் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கோபமாக வாக்குவாதம் செய்தபடியே கர்ப்பிணி உஷாவை காலால் எட்டி உதைத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் காதில் இருந்து ரத்தம் வழிந்தபடியே கணவரின் கைகளிலேயே கர்ப்பிணி உஷாவின் உயிர் கரைந்துபோனது.

Special Correspondent

உயிரிழந்த உஷா தொடர்பான வழக்கில் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.6 நீதிபதி ‌ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வருகிற 21ஆம் தேதி வரை அவரை சிறைக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வாளர் காமராஜ் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைக்கு போகும் போது கைலியை மடித்து ஜாலியாக வந்த அவருக்கு தலையில் காயம் என சொல்லி அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தையல் போட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் காமராஜூக்கு மற்ற கைதிகளால் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

உஷாவின் உயிரிழப்பால் சிறைக்கைதிகள் போலீஸார் மீது கோபத்தில் உள்ளனர் அதனால் ஆய்வாளர் காமராஜூக்கு சிறையில் கைதிகள், ரவுடிகளால் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் காமராஜ் தங்கி சிகிச்சை பெறும் சிறை மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.