எப்படி அகில இந்திய அளவில் திமுக தமிழ்மொழியில் அமித்ஷா_உளறல்கள் ஹாஷ்டாக இடத்தில் முதலவதாக வைக்க முடிகிறது...

Special Correspondent

அது பற்றி தெரிவதற்குமுதலில் திமுக 1949 ஆண்டில் குன்றத்தூரில் சிந்திய முதல் ரத்தம் வரலாறை சற்றே சீர் தூக்கி பார்க்கவேண்டும்...

1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பபட்டது. ஆரம்பித்த உடனே திருச்சி நீதிமன்றத்தில் அண்ணாவுக்கு ஆறுமாதம் சிறை என்று தீர்ப்பு வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அவரால் எழுதப்பட்டு 15 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகிவிட்ட #ஆரிய_மாயை என்ற புகழ் பெற்ற புத்தகம் வகுப்பு வேறுபாட்டை விதைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது.

புத்தகத்தை எழுதிய அண்ணாவுக்கும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிட பண்ணை கண்ணப்பனுக்கும் 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை கட்ட இவர்கள் இருவரும் மறுத்ததால் நான்கு மாதம் சிறை தணடனையை ஏற்றார்கள்.

இதை தொடர்ந்து திமுக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது, நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைகளை பற்றி கவலைப்படாமல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று திமுக தலைமை அறிவித்தது.

குன்றத்தூரில் ஒரு கூட்டம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும் மீறி பேசுவதற்கு சென்றார் என்.வி.நடராசன். குன்றத்தூருக்குள் அவர் வருவதற்கு முன்னால் கைது செய்யப்பட்டார். கூட்டம் கேட்க காத்திருந்தவர்களை கலைத்தது காவல்துறை. கலையவில்லை அவர்கள், துப்பாக்கியை எடுத்து ஏழு ரவுண்ட் சுட்டார்கள், இரண்டு பேர் படுகாயம் அடைந்தார்கள்.

ஆனாலும் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது.

இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது. DMK not for power but for Policy can be understood here.

Special Correspondent

1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.

1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.

இதன் காரணமாக் 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.

1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.

“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது.

அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.

இங்கு ஒரு சிறு flashback அவசியம்...

1937 இல் ராஜகோபாலச்சாரியார் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது நீதிக்கட்சியை சார்ந்தவர்களான ஆதரவால் இப்போராட்டத்தில் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராஜாஜி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது.

ஆனால் அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. பெரியார் பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என அவேசமாக பேசி கொண்டேஇருந்தார்...

இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று பெரியார் வலியுறுத்தினார் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன...

இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் திமுக எப்படி எடுத்தது என்பது தான் கவனிக்கதக்கது, ஈ வி கே சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட போராட்டக்குழுவில் கருனாநிதி , அன்பழகன், மதியழகன், மதுரை முத்து ,அன்பில் தர்மலிங்கம், எஸ் ஏ ராஜ மாணிக்கம், ஏ கோவிந்தசாமி, பஉ சண்முகம் ,கண்ணதாசன் ஆகியோர் இடம் பெற்றார்கள்... இந்தியை ஆட்சி மொழி ஆக்க வழி வகை செய்யும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 17 வது பிரிவை கொளுத்தும் போராட்டத்தை திமுக நடத்தியது.

அன்றைய காங்கிரஸ் அரசு போலீஸை வைத்து மிக கடுமையாக ஒடுக்கியது...! அமைதியாக மறியல் செய்தவர்களையும் அடித்து நொறுக்கி விரட்டினார்கள்.வலுக்கட்டாயமாக திமுக கொடிகள் பறிக்கப்பட்டன.

கூட்டம் கூட்டமாக கைது செய்து கொண்டு போய் அடைத்தார்கள். 2000 பேர் மட்டுமே இருக்க முடிந்த சென்னை மத்திய சிறையில் 5300 பேரை இரு மடங்கி்ற்கு அதிகமானவர்கள் அடைக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில் எம்ஜியார் அவர்களின் பங்கு என்ன என்று கேள்வி வரலாம் நடிகர்களுக்கு முகம் முக்கியம் என்பதால் போரட்டத்தில் இருந்து விலக்கு பெற அவர் திமுக தலைமையிடம் கோரிக்க வைக்க திமுக அதனை திமுகவில் உள்ள நடிகர்களுக்கு விலக்கு அளித்தது...

அன்றே திமுக இந்த கோரிக்கையை நிரகரித்து இருந்தால் தன் மதிப்பை இழந்து எம்ஜியார் காணாமல் போய் இருப்பார் என்போர்களும் உண்டு ..ஒரு அட்டை எப்படி அடுத்தவர் ரத்ததை உறிஞ்சி தன்னை வளர்த்து கொள்வதை போல திமுகவின் ரத்ததில் தன்னை வளர்த்து அரசியல் அமைதியாக கற்று கொண்டார் எம்ஜியார்..

Special Correspondent

#MGR அயிரத்தில் ஒருவன் டுயட் கோவவில் பாடி கொண்டு இருந்த அதேநேரத்தில் தான் கதறல் ஒலி வெளியே கேக்கும் அளவுக்கு அடித்தால் அடுத்தவர்கள் வர மாட்டர்கள் என்ற உத்தரவு வரவே சிறைகளுக்குள் திமுகவினர் மீது அடி விழுந்தது.

கதறல் ஒலி தமிழ் நாடு முழுவதும் கேட்டாலும் இந்த போராட்டத்தில் மட்டும் 18 ஆயிரம் திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். "கொள்கை கேட்டார்கள் ஒரு நிமிஷம் தலைசுத்திச்சு " என்று சொல்பவர்கள் இங்கே சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்...

நாடு முழுக்க எல்லா நீதி மன்றங்களிலும் இந்த வழக்கு நடந்தது..சிறையில் சென்னையை சேர்ந்த கோசு மணியும் ஸ்ரீ வில்லித்தூரை சேர்ந்த பொற்செழியனும் இறந்து போனார்கள்.

இந்தி எதிர்ப்பு போர் தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னசாமியும் கோடம் பாக்கம் சிவ லிங்கமும் சத்திய மங்கலம் முத்துவும் திராவிடம் பேசிய திமுகவினர்தான்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் பெரம்பாலானவர்கள் திமுக மாணவர்கள்தான்...

இங்கு அன்று மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட எனது தந்தை சங்கர்ராம் சொன்னதையும் பதிகிறேன் "வெள்ளைஉடையில் ஊர்வலமாக மருத்துவ மாணவர்கள் செல்லும் போது உங்களுக்கு ஏன் தம்பி இந்த வேலை தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என்று காவலர்கள் பல முறைகேட்டு கொண்டும் மறுத்து தடையை மீறி ஒரு முறை அல்ல பல முறை சென்று உள்ளோம். ஆனால் என்ன காரணத்திலலோ அன்றைய மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்களை யாரையும் கைது செய்யவில்லை..."

"தமிழகம் எங்கும் போராட்டத்தை தூண்டியதாக கலைஞர் கருணாநிதி-யை முதலமைச்சர் பக்தவக்சலம் கைது செய்தார். இது தான் அன்றைய மாணவர்களை அரசியல் தலைவர்களாக பரிணாமம் செய்ய துவங்கிய திமுகவின் பொற்காலம்.

மேலும் பாதுகாப்பு சட்டப்படி தமிழகத்தில் கைதான முதலாமவரும் அதே கருணாநிதி தான்.

1967 தேர்தல் வந்தது.. புதர் மண்டிக்கிடந்த அந்த விருகம்பாக்கத்தில் திமுக வின் தேர்தல் மாநாட்டு இடத்தை பார்க்க வந்த அதே கருணாநிதி தான் 15 நாளில் அதனை அரங்கமாக அதனை ஆக்கி காட்டினார். காடாக இருந்த இந்த இடத்தை கருநாகங்கள் மலிந்த இந்த இடத்தை, தொட்டால் கொட்டும் கருந்தேள்கள் குடியிருந்த இந்த இடத்தை இப்படிப்பட்ட எழில் மிக்க பூமியாக மாற்றினோம்... காடாக இருக்கும் இந்த நாட்டை நாடாக மாற்றியமைக்க மாட்டோமா என்று கேட்டதும் அதே கருணாநிதி தான்...

1953 ஆண்டில் மும்முனைப் போரட்டத்தில் டால்மியாபுரம் ரயில் தண்டவாளத்தில் கருணாநிதி, முல்லை சக்தி, கஸ்தூரி, குமரவேல், குழந்தைவேல், ஆகிய ஐந்து பேர் தலைவைத்து உங்கள் முடிவுதான் என்ன என்று கேட்ட காவலர்களிடம் "முடிவைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்று சொன்னதும் அதே கருணாநிதி தான்...

ஆக மத்திய ஆசியாவில் இருந்து ஒருசிவானி சிவகுமார் அல்ல,
கிழக்கு ஆசியாவில் இருந்து ஒரு நரசிம்மன் நரேஷ் அல்ல,
ஐரோப்பில் இருந்து ஒரு செல்வகுமார் ராமசந்திரன் அல்ல,
அமெரிக்காவில் இருந்தாலும் பேசும் ஒரு அ. வெற்றிவேல் அல்ல,

உலகம் முழுவதும் பரவி இருக்கும் பல்லாயிர நன்றிமிக்க நபர்களுக்கு திராவிடம் என்பது உணர்வல்ல அது இனம். அந்த இனத்தின் மொழி தான் தமிழ்...

புரியாதவர்கள் புரிய, தெரியாதவர்கள் தெளிய திராவிடம் தமிழை தோளில் ஏந்தி தொடரும்...