காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பாத்தியனூருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்லும் வழியில் திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

Special Correspondent

இந்நிலையில் நீட் விஷ்யத்தில் தமிழ் மக்களை வஞ்சித்து போலவே காவிரியில் எங்களை வஞ்சிக்கும் நிர்மலவே திரும்பி போ என்ற கோஷத்துடன் திமுக முன்னேற ராமநாதபுரம் பார்த்திபனூரில் ஏராளமான அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் வரும் வழியில் கற்கலை வீசுவது செருப்பு வீச்சு போன்ற செயல்களில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியதும் பிரச்ச்னை விஸ்வருபம் எடுக்க காரணம் என்று திமுகவினர் கூறினார்.

மேலும் மதுரையில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் திட்டங்கள் கிராமங்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா என ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் 115 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய தாம் வந்துள்ளதாகவும், அவர் கூறினார்.

கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் திமுக அனுமதி பெற்றனர் என்ற நிலையில் கற்கலை வீசிய காலணி வீசிய நபரகளை தமிழக போலிசார் தேடி வருவதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.