எழுத்தாளர் கவுரி லங்கேஷின் மரணம் என்னை மாற்றியதா என்றால், ஆம் கவுரி மரணம் என்னை மாற்றியது. மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது. அவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார். அவரின் குரல் அடங்கிய போது, அது என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நாம் எல்லோரும் அவரை தனியாக போராட வைத்து விட்டோம்.

Special Correspondent

ஆனால் இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். ஆனால், என் குரலை இப்போது நிறுத்த பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு யாரும் இல்லை.பாஜக மட்டும்தான். மோடியிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று கேட்டால், உடனே அவர் நேருவை பற்றி பேசுகிறார்; திப்பு சுல்தான் பற்றி பேசுகிறார்.

100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பேசுகிறார் என குறிப்பிட்டார். இந்த 4 வருடம் என்ன நடந்தது என்று பேசுவது இல்லை. நான், ஏன் என் தாத்தா காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு ஓட்டு போட வேண்டும்? மோடி எவ்வளவு பேசினார், ஆனால் என்ன செய்தார்?

நான் மோடிக்கு எதிராக பேசினால் உடனடியாக என்னை பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். அங்கு தீவிரவாதமும், வறுமையும் இருக்கிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன், அங்கே மதம்தான் அரசியலை தீர்மானிக்கிறது. ஒரு மதம் நாட்டை ஆண்டால், இப்படித்தான் பாகிஸ்தான்போல இந்தியாவும் ஆக வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்களா ? நான் மோடிக்கு எதிராக பேசியதை