நெல்லை அருகே ஆற்றில் மணல் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த காவலர் ஜெகதீஷ் துரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Special Correspondent

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நம்பியாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு பரப்பாடி அருகே பாண்டிச்சேரி கிராமத்தில் நம்பியாற்றில் டிராக்டரில் மணல் அள்ளுவதாக விஜய நாராயணம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது.

இதில் சாதாரண உடையில் சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் துறை நடுக்காட்டுக்குள் மணல் கடத்தல் கும்பலை பிடித்துள்ளார். அந்த கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ஜெகதீஷ் உயிரிழந்தார் என்றும் இதையடுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதாகவும் தகவல் வந்துள்ளது.