கடந்த 2 நாள்களாகத் தொடர்ந்து மலைக்கோயிலில் ஆய்வு நடந்து வருகிறது. மலைக்கோயிலில் உள்ள நவவீரர்கள் சந்நிதி, பெரிய நாயகியம்மன் கோயிலில் உள்ள சிலைகள், மலைக்கோயில் 'டபுள் லாக்க'ரில் உள்ள ஐம்பொன் சிலைகள் மற்றும் சின்ன குமார சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, கன்னிமார் சிலைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Special Correspondent

கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாசனமான ஞான தண்டாயுதபாணி (முருகன்) சிலைதான் பழனி மலையில் உள்ள மூலஸ்தானத்தில் உள்ளது. அப்படிபட்ட நவப்பாசன முருகன் தான் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வருவதால் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து இந்த முருக பெருமானை தரிசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் போகரால் உருவாக்கபட்ட முருகனின் நவப்பாசன சிலை பழுதடைந்துள்ளதால் அதை மாற்றி அமைக்கவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் கடந்த 2004ல் முதல்வராக இருந்த ஜெவிடம் வலியுத்தினார். அதை தொடர்து தான் அப்பொழுது இருந்த கோவில் இ.ஓ. ராஜா மூலமாக கும்பகோணத்தை சேர்ந்த அரசு சிலை சிற்பியான ஸ்தபதி முத்தையாவிடம் பத்து கிலோ தங்கம் கொடுத்து ஐம்பொன்னால் 200 கிலோ அளவில் முருகனின் மூலவர் சிலை செய்ய சொல்லப்பட்டது.

ஆனால் இஓ ராஜாவும், முத்தையாவும் விதி முறைப்படி ஐம்பொன் சிலை செய்யாமல் இருவரும் கூட்டு கொள்ளை அடிப்பதற்காக சிலையில் அதிமாக செம்பு கலந்ததுடன் மட்டும்மல்லாமல் ஒரு துளி வெள்ளி கூடமுலாம் பூசாமலேயே 21 கிலோ கூடுதலாக சேர்ந்து 221 கிலோ எடையில் ஐம்பொன் சிலை செய்து விட்டு சிலைக்கு பயன்படுத்த வேண்டிய 41/2கிலோ தங்கத்தை மோசடி செய்து இருவரும் பங்கு போட்டு கொண்டு இச்சிலையை ஜெ. அனுமதியின் பேரில் அப்போதை மூலவ நவப்பாசன சிலையை மறைத்து வைத்தனர்.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்ததின் பேரில் அந்த ஐம்பொன் சிலையை அகற்றி ஸ்டோர் ரூம்பில் போட்டு விட்டனர். இந்த நிலையில் தான் அந்த ஐம்பொன் சிலையில் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது.

14 வருடங்களுக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யான பொன் மாணிக்கவேலுக்கு பல புகார்கள் வந்ததின் பேரில் கடந்த வாரம் சிலை செய்ததில் மோசடி செய்த ஸ்தபதி முத்தையாவையும், முன்னால் கோவில் இ.ஓ. ராஜாவையும் சிலை தடுப்பு காக்கிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரும் இப்போது ஜாமீனில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் 2004-ம் ஆண்டு பழநி கோயில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட தங்க நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோரை நேற்று இரவு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இவர்கள் இருவரும் ஸ்தபதி முத்தையாவுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல் குழுவினரின் தொடர் அதிரடி விசாரணையால் கோயில் முன்னாள் அதிகாரிகள் மற்றும் பல வி.ஐபி-க்கள் கலக்கத்தில் உள்ளனர். இன்றும் விசாரணை தொடர்கிறது. கோயிலில் உள்ள சிலைகள் குறித்த விவரங்கள், அவற்றில் போலியான சிலைகள் கலந்திருக்கிறதா என்ற ரீதியில் விசாரணை தொடர்கிறது.