தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் மாற்றப்பட்டுள்ளனர்.

Special Correspondent

நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வி கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்து நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டார். தூத்துக்குடி எஸ் பி மகேந்திரன் சென்னையில் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நேற்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை சரியான முறையில் கையாளாத காரணத்தினால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த மாற்றம் தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சி என்று சமூகவலைதளத்திலே பதிவிட்டு வருகிண்றனர்

மேலும் தகவல்களுக்கு: