நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த 4 மக்களவைத் தொகுதிகளுக்கும், 10 பேரவைத் தொகுதிகளுக்கும் திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

Special Correspondent

உத்தரப் பிரதேசத்தின் கைரானா மற்றும் மகாராஷ்டிரத்தின் பால்கர், பந்தாரா - கொண்டியா, நாகாலாந்து ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. அதேபோன்று கேரளத்தின் செங்கண்ணூர், மேகாலயத்தின் அம்பதி, மேற்கு வங்கத்தின் மகேஷ்தலா, ஜார்க்கண்டின் கோமியா மற்றும் சில்லி, பிகாரின் ஜோகிஹத் உள்ளிட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.

அதில் உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த 25 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படவில்லை என்றும், அவற்றில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், இவற்றுக்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று கூறினர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்க அறிக்கை ஒன்றை திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பொதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகும்போது அவற்றுக்கு மாற்றாக வேறு இயந்திரங்கள் பொருத்தப்படுவது வழக்கம். அதற்காக தேர்தல் நடைபெறும் இடங்களில் 25 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்படும். அத்தகைய நடைமுறையை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. அவை அனைத்தும் உடனடியாக சரிசெய்யப்பட்டு விட்டன. ஆனால், அவை தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன என்றார் அவர்.

ஆனால் பிரபல மூத்த வழக்கறினர் பூஷன் தனது டிவிட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேட்டின் குற்றம் தேர்தல் ஆனையம் மீது விழுந்துள்ளதால் வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என கூறி உள்ளார்.