ஸ்கேம்ஸ்டர், பி.ஜே.பி.,' என, பா.ஜ., ஊழல் பட்டியலை, நேற்று முன்தினம், சிவசேனா வெளியிட்டது.

அதில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, பா.ஜ., அமைச்சர்கள், வினோத் தாட்வே, விஷ்ணு சவரா, பிரவிண் தரேகர்,ஜெயகுமார் ராவல், சந்திரசேகர் பவாங்குளே உள்ளிட்டோர் மீது, பல ஊழல் புகார்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Special Correspondent

முன்னாள் அமைச்சர், ஏக்நாத் காட்சே மீதான புகார்கள், கர்நாடக, பா.ஜ.க, தலைவரும், முன்னாள் முதல்வருமான, எடியூரப்பாவின் மீதான புகார்கள் என, மிக நீண்ட பட்டியலை, சிவசேனா வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், 'பா.ஜ.க, தான் எங்கள் முக்கிய எதிரி. சில நிர்ப்பந்தங்களால், மாநில அரசில் இடம்பெற்றுள்ளோம்' என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'கூட்டணி யிலும், ஆட்சியிலும் தொடர்வது குறித்து, சிவசேனா முடிவு செய்யட்டும்' என, முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.

288 தொகுதிகளில், பா.ஜ.க,வின் பலம், 122 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு, 145 பேரின் ஆதரவு தேவை. சிவசேனாவுக்கு-63, காங்கிரஸ் கட்சிக்கு-43, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு-41 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.

கோல்கட்டாவில் நடக்க உள்ள, மேற்கு வங்க முதலீட்டாளர் மாநாட்டை யொட்டி, மம்தா பானர்ஜி, மும்பைக்கு வந்துள்ள இந்த நிலையில் , மம்தா பானர்ஜியை, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே,நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

தன் மகன், ஆதித்யா தாக்கரேயுடன், மம்தா தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று, அவரை, உத்தவ் தாக்கரே சந்தித்தார். பிஜேபி ஆர்எஸ்எஸ் பரம எதிரியான மம்தாவை, கூட்டணி கட்சி சிவ சேனா தலைவர் சந்தித்தது கடும் அதிர்ச்சியை பிஜேபியில் ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக இருவரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு, முக்கியத்துவம் பெரும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.