ஸ்கேம்ஸ்டர், பி.ஜே.பி.,' என, பா.ஜ., ஊழல் பட்டியலை, நேற்று முன்தினம், சிவசேனா வெளியிட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

Special Correspondent

நேற்று காலை முதல் மாலை வரை மழை இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றுவதில் மக்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நேற்று மாலை பல இடங்களில் மீண்டும் மழை தொடங்கியதால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்ற முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் பாம்பு, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். முன்னெச்சரிக்கைக்காக சென்னையில் நேற்று முன் தினம் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழைக்கு நடுவே மின்சாரம் இல்லாததால் மக்கள் இருளில் தத்தளித்தனர். பெரும்பாலான கடைகளும் நேற்று மூடப்பட்டதால் மெழுகுவர்த்தியும் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

தொடர் மழையால் நேற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. மழை நீடிப்பதால் சென்னையில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பைக், கார்களிலும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் சென்னையில் நேற்று பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. போரூர் அடுத்த மாங்காடு சீனிவாசநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர். இந்நிலையில், திருவேற்காடு-ஆவடி மெயின்ரோடு இடையில் உள்ள ஆற்று தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கப்படுத்தி செல்வதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Special Correspondent

செங்குன்றம் அடுத்த கோனிமேடு ஏரி நிரம்பி தண்ணீர் மெயின்ரோட்டிற்கு செல்வதால் அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மணலி காமராஜ் சாலை, எம்எல் சந்திப்பு, ஜோதி நகர் அருகே உள்ள சாலைகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தேங்கி கிடக்கும் தண்ணீரால் வாகனங்கள் தத்தளித்து சென்றன. இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.

பெரியபாளையம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் தொடர் மழையால் சுமார் 200 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளது. தொடர் மழை காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் நேற்று முன் தினம் மின்சார ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தண்டையார்பேட்டை பட்டேல் நகர் 2வது தெருவில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து மக்களின் வீடுகளுக்குள் புகுந்தது. மணலி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை மழையால் சாலைகள் படுமோசமாக 3 அடி உயர அளவுக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

திருவொற்றியூர் ராஜாஜி நகரில் உள்ள தெருக்களில் மழைநீர் வெளியேற முடியாமல்ஆறுபோல சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பதால் அங்கு கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தற்போது காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் மட்டுமே தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரி நிரம்பவில்லை.

அரசின் தூர் சரியாக வாராத மெத்தன போக்கால் கடந்த இரண்டு தினங்களாக, சென்னையின் முக்கிய நீர்வழிதடமான கூவத்திலிருந்து வினாடிக்கு, 6,500 கன அடி தண்ணீரும், அடையாறு ஆற்றிலிருந்து 14,000 கன அடி தண்ணீரும்,, பக்கிங்ஹாம் கால்வாயிலிரிருந்து 1,400 கன அடி நீரும் கடலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தூர் சரியாக வாராத காரணத்தினால் உயர்நீதிமன்றம் கண்டத்துக்கு ஆளான அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னை, புறநகர் பகுதியில் எங்கெங்கு தண்ணீர் தேங்கி உள்ளது என்பது குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.