அரசு போக்குவரத்துக் கழகங்களின் கட்டடங்கள், பேருந்துகள், பணிமனைகள் உள்ளிட்டவற்றை 2453 கோடி ரூபாய்க்கு அடகு வைத்து அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

Special Correspondent

ஏழை எளிய நடுத்தர மக்களின் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் இப்படி மோசமான நிர்வாகக் குளறுபடிகள் ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது என்றும்...

அரசு போக்குவரத்துக் கழகத்தின் 490 பேருந்துகள் 44.27 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன என்றும் ...

அயனாவரம், மந்தைவெளி பணிமனைகள் 12 கோடி ரூபாய்க்கும், போக்குவரத்துக் கழகக்தின் ஒர்க்‌ஷாப், பேசின்பாலம், தி.நகர், திருவான்மியூர், அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகள் அயனாவரம், மந்தைவெளி பணிமனைகள் 12 கோடி ரூபாய்க்கும், போக்குவரத்துக் கழகக்தின் ஒர்க்‌ஷாப், பேசின்பாலம், தி.நகர், திருவான்மியூர், அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் ரூ.580.63 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டிருக்கிறது என்றும்...

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடமாக இருக்கும் ‘பல்லவன் இல்லம்’ 7.50 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்பது பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்...

இந்த நிலை நீடித்தால் இந்தக் ‘குதிரை பேர’ அரசு தலைமைச் செயலகத்தையே மத்திய அரசுக்குத் தெரியாமல் அடகு வைத்து விடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது என்றும் அதிமுக அரசின் நிர்வாகத்தை கிண்டலடித்து உள்ளார்...

போக்குவரத்துத்துறை அமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா’ கொண்டாட்டத்துக்கு பொதுமக்களை அழைத்துவர அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை மோசடியாகப் பயன்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, அரசு போக்குவரத்துக் கழகத்தை சிறப்பாக நிர்வகிப்பதில் துளியும் காட்டவில்லை என்றும் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.