ஜெயா டிவியில் ஐந்து நாட்கள் வளைத்து வளைத்து சோதனை செய்யும் அதிகாரிகள், ஜெயா டிவியின் இயக்குநராக இருந்த வைகுண்டராஜனை ஏன் சோதனை செய்யவில்லை என்ற கேள்வியை பிரபல புலானய்வு செய்தி தளம் சவுக்கு கேட்டுள்ளது.

Special Correspondent

ஜெயா டிவியில் பங்கு வைத்திருப்பதற்காகவே வைகுண்டராஜன் பழி வாங்கப் படுகிறார் என்று ஜெயலலிதா அறிக்கையே விட்டிருக்கிறார் என்றும்,

வைகுண்டராஜன் மீது திமுக அரசு நடவடிக்கை எடுத்தற்காக, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பே செய்திருக்கிறது என்றும்,

மன்னார்குடி மாபியாவின் வீடுகளில் சல்லடை போட்டுத் தேடும் வருமான வரித் துறையினர் வைகுண்டராஜன் வீட்டில் சோதனை நடத்தியிருந்தால் கருப்புப் பணமோ கணக்கில் வராத சொத்துக்களோ கிடைத்திருக்குமா இல்லையா ?

வைகுண்டராஜன் ஜெயா டிவியில் மட்டும் பங்குதாரர் அல்ல. மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களில் இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருந்திருக்கிறார். ஜெயா டிவியில் பங்கு வைத்திருக்கும் ராஜ் சுரானா வீட்டில் சோதனை நடத்தும்போது, வைகுண்டராஜன் வீட்டில் ஏன் நடத்தவில்லை என்றும்,

மேலும் ஆர்கே நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கான காரணம், வருமான வரி சோதனைகளின்போது கண்டு பிடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான சான்றுகளே. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 89 கோடி ரூபாயை விநியோகம் செய்தது பட்டியலோடு கண்டுபிடிக்கப்பட்டது என்றும்,

அன்று யாருக்காக அந்த பணம் விநியோகிக்கப்பட்டது ? தொப்பி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்காகத்தானே பண விநியோகம் நடந்தது ? டிடிவி தினகரனுக்காக பண விநியோகம் செய்தவர்கள் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டுமா இல்லையா என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது குறிப்பிட தக்கது என்றும்,

பிரபல நியூஸ்7 டிவி சேனல் உரிமையாளர் வைகுண்டராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது...