கோவை பாரதியார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை அதிமுக அமைச்சர்கள் முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னிர் செல்வம் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

Special Correspondent

ஆளுநரின் திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத அரசு இருக்கும் வேலையில் மட்டும் அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையில் ப்ரெசிடெண்ட் ரூல் இருந்தால் மட்டுமே ஆளுநர் ஈடுபட முடியும் என்றும் மற்றபடி நேரிடையாக மாவட்ட ஆட்சியாளர்களை அழைத்து பேசுவது சட்ட மீறல் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது அதிமுக அரசுக்கு மற்றும் ஆளுநருக்கும் உள்ள இடைவெளியை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.