காங்கிரஸ் அரசு பதவியில் இருந்த காலத்தில் ஊழலை செய்தால் அமைச்சர்கள் பிரதம மந்திரி வரை சாமானியன் வழக்கு போடும் சட்டமான லோக் ஆயுத கொண்டு வர தீவிரமாக போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தி பிரபலம் ஆனவர் அன்னா ஹசாரே.

Special Correspondent

மோடி தலைமயில் பிஜேபி ஆட்சி அமைத்தும் மொன்றை வருடம் ஓடிய நிலையில் மத்திய அரசு இந்த சட்டத்தை ஏனோ இயற்றாமல் தள்ளி போட்டே வந்தது...

இந்த நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி வந்த அன்னா ஹசாரே, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் ஒரு துறவி. எனக்கு எந்த வித தேவைகளும் கிடையாது. நான் சும்மாதான் டெல்லி வந்தேன்.

இன்று காந்தி ஜெயந்தி என்பதால் தேசப்பிதா காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காகவே வந்தேன். அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அண்மையில் லோக்பால், லோக் ஆயுக்தா குறித்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது லோக்பாலை நடைமுறைப்படுத்துவதற்கான நடைமுறையை உடனடியாக மத்திய அரசு தொடங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. லோக்பால் குறித்து ஹசாரே கூறுகையில், லோக்பால் நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது வேதனைக்குரியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் கூட முழுக்க முழுக்க ‘ஈகோ’ பிரச்னையின் காரணமாகவே, லோக்பால் சட்டத்தை செயல்படுத்தாமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மூன்றரை வருடம் சும்மா இருந்து விட்டு இப்போ "ஈகோ’ பிரச்னையின் காரணமாகவே, லோக்பால் சட்டத்தை வருத்தம் அளிக்கிறது என்கிற ஹசாரே பேச்சை சமூக வலைதளத்தில் ஸ்லீப்பர் செல் ஆப் பிஜேபி என்று பதிவிட்டு வருவது வைரல் ஆகி வருது.