சிறந்த நடிகர் மோடி என பிரகாஷ் ராஜ் பேச்சை கண்டித்து லக்னோ நீதி மன்றத்தில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு அந்த வழக்கு அக்டோபர் 7 -ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக நேற்று பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் நடிகர் ப்ரகாஷ் ராஜ் பேசிய பேச்சு தமிழக பாஜக வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Special Correspondent

அதில் அவர் பேசிய விவரத்தின் தொகுப்பு :

"மோடி என்னை விடப் பெரிய நடிகன்...

"எனக்குக் கொடுக்கப்பட்ட 5 தேசிய விருதுகளையும் அவருக்குத் தரலாம், மோடிதான் இதற்குத் தகுதியானவர்.

"கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டு ஒரு மாசம் ஆச்சு. அவரோட ஃபாலோயர்கள் கொடூரமான பதிவுகள் எல்லாம் போட்டு அந்தக் கொலையைக் கொண்டாடுறாங்க. இன்னிக்கு வரைக்கும் பிரதமர் மோடி வாயைத் திறக்கல.

"அந்த உ.பி முதல்வர் யோகி அந்த ஆளூ முதல்வரா இல்லை பூசாரியான்னு தெரியல.

"எனக்குக் கொடுக்கப்பட்ட இந்த அவார்டுகளை எல்லாம் அவருக்குக் கொடுக்கலாமான்னு தோணுது...

இவரின் இந்த பேச்சை தொடர்ந்து முன்னாள் காமெடி நடிகர் எஸ். வி. சேகர் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பிஜேபி பலரும் விருதை திருப்பி கொடுக்கலாம் என்ற ரீதியில் பேட்டி கொடுத்து சமூக வலைதளத்தில் பதிவுகளை இட்டனர்.

இதில் வேடிக்கை என்னெவென்றால் எங்கேயுமே பிரகாஷ் ராஜ் தன் விருதை திருப்பி தருவேன் என்று கூறவே இல்லை ஆனால் நடிப்புக்கு தான் பெற்றது போலவே தேசிய விருது அவரது எல்லாம் மோடிக்கு தரலாம் என்ற ரீதியிலே பேசி உள்ளார்...