உலகின் முன்னணி வர்த்தக பத்தரிக்கையான போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்தியா பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Special Correspondent

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி 2ம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1.23 லட்சம் கோடி (19 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. இவர் கடந்த ஆண்டைவிட இரண்டு இடம் முன்னேறியுள்ளார்.

இந்துஜா சகோதரர்கள் 3வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.1.19 லட்சம் கோடி (18.4 பில்லியன் டாலர்).

கடந்தாண்டு 2ம் இடத்தில் இருந்த சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சங்வியின் 9வது இடத்துக்கு சென்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி (12.1 பில்லியன் டாலர்).

முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி 45வது இடத்துக்கு சென்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி (3.15 பில்லியன் டாலர்).

போர்ப்ஸ் வெளியிட்ட இந்திய பணக்காரர்களின் 100 பேர் பட்டியலில், 7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஓ.பி ஜிந்தால் குரூப் தலைவர் சாவித்திரி ஜிந்தால் மற்றும் இவர்களது குடும்பம் போர்ப்ஸ் பட்டியலில் 16வது இடத்தை பிடித்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.48 ஆயிரம் கோடி (7.5 பில்லியன் டாலர்).

இவருக்கு அடுத்த இடத்தை லூபின் பார்மா நிறுவனத்தின் 47 சதவீத பங்குகளை வைத்துள்ள மஞ்சு தேஸ் பந்து குப்தா பிடித்துள்ளார். பட்டியலில் இவர்களது குடும்பம் 40வது இடத்தை பிடித்துள்ளது.

யுஎஸ்வி இந்தியா நிறுவனத்தின் தலைவர் லீனா திவாரி, 71வது இடத்தை பிடித்துள்ளார். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி(2.19 மில்லியன் டாலர்).

ஆனாலும் 617 இந்தியர்கள் 1000 கோடி சொத்து மதிப்பை மேல ஏறிய இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில், உலகளவில் இந்தியா ஓரிடம் கீழிறங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், மொத்தமுள்ள 137 பொருளாதார நாடுகளில், சென்ற ஆண்டு இந்தியா 39-ஆவது நாடாக இருந்தது. இந்த முறை ஓரிடம் பின்தங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.