குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றதில் சரண் அடைந்துள்ளார்.

Special Correspondent

கடந்த வாரம் நடிகர் ஜெய் தனது நண்பருடன் காரில் சென்ற போது அடையார் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் அவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஆவணங்களை சமர்பிக்காததால் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

விசாரனைக்காக நடிகர் ஜெய் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிடியாணை பிறப்பித்தும் அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் ஜெய் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றதில் சரணடைந்தது தொடர்ந்து அதற்கான நகல் அவரிடம் வழக்கப்பட்டது.

இதனையடுத்து ஜெய்யை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில் அவராகவே முன்வந்து 4-வது நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

நடிகர் ஜெய் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் அவருக்கு 6 மத காலத்துக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தும் ரூபாய் 5000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.