பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Special Correspondent

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் சாலையோரமாக தனி நபர்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் ஆகியவை பல வருடங்களாக உபயோகமில்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், மழைக்காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வருகிறது.

அதனை தடுத்திட வாகன உரிமையாளர்கள் அவர்களுடைய உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை ஒருவார காலத்திற்குள் அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறினால் பெருநகர சென்னை மாநகராட்சி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.