இந்திய விமானப் படையில், ஜூன் 2016ல், அதிகாரிகளாக பணியில் சேர்ந்த, பவானா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய, மூன்று பெண்கள், மேற்கு வங்கத்தில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில், விமானிகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

Special Correspondent

விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்களில், பெண் விமானிகளை பணியமர்த்த, விமானப் படை திட்டமிட்டுள்ளது. இதற்காக, சிறப்பாக செயல்படும் பயிற்சி விமானிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், பவானா மோகனா மற்றும் அவானி மூன்று பெண் அதிகாரிகளுக்கும், போர் விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

3 பேருக்கும் பயிற்சி அளிக்கும் மூத்த அதிகாரியும், அடுத்த மாதம் போர் விமானங்களை விமானிகள் இயக்க உள்ளதாக கூறினார். போர் விமானங்களை இயக்க அடுத்த 3 பெண் விமானிகளை இந்திய விமானப்படை தேர்வு செய்துள்ளது.

இது தொடர்பாக விமானப்படை தளபதி தானோவா கூறியதாவது: தற்போது, பெண் வீராங்கனைகளை மிக்21 பிசன் ரக போர் விமானங்களை இயக்க பரிசீலித்து வருகிறது. மற்ற விமானங்களை விட இந்த விமானங்கள் மூலம் திறமையை வளர்த்து கொள்ள முடியும். இதற்காக அவர்களுக்கு 3 வார காலம் கடுமையான பயிற்சி வழங்கப்படும். பெண் வீராங்கனைகள் 3 பேரும் நன்கு பயிற்சி பெற்று தேறிய பிறகு, மற்ற போர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.

விமானப் படைக்கு சொந்தமான மிக்21 பைசன் ரக போர் விமானங்களை, முதல் முறையாக பெண் பைலட்டுகள் அடுத்த மாதம் இயக்க உள்ளது பெண்கள் அணைத்து துறையிலும் முன்னேறி சாதிக்க முடியும் என்பதை உறுதி செய்வதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெவித்தனர்