சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகாயாசினி, திருநங்கையான இவர் கடந்த கடந்தாண்டு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக தேர்வானார், வண்டலூரில் பயற்சி முடித்து பின்னர் தருமபுரி காவல் நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தார், அதன் இறுதியாக சுமார் 244 பேர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்ட அதை நிறைவு செய்தனர்.

Special Correspondent

கடந்த ஒரு ஆண்டு காலமாக காவல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திருநங்கை பிரித்திகா யாசினி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 244 பேருக்கும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருநங்கை பிரித்திகா யாஷினி சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் காவலராக பணி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இவரின் பனி சிறக்க ஸ்பெல்கோ தனது 1.3 தினசரி இலட்ச வாசகர்களுடன் சேர்ந்து வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.