கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக உள்ள நிலையில், பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமிக்க கேரள தேவசம் தேர்வு வாரியம் சமீபத்தில் சிபாரிசு செய்தது.

Special Correspondent

அதை ஏற்று அவர்களை கேரள அரசு 36 பேரில், தலித் இனத்தை சேர்ந்தவர்கள் 6 பேர் நியமித்தது. அவர்களில் ஒருவரான ஏடு கிருஷ்ணன் (வயது 22) என்பவர், திருவல்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று அக்கோவிலில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தன்னுடைய குரு கே.கே.அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்று, தற்போதைய தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் அவர் கோவிலுக்குள் நுழைந்தார். கர்ப்பகிரகத்துக்கு சென்று மந்திரம் ஓதி, பணியை தொடங்கினார்.

இதன்மூலம், கேரளாவின் முதலாவது தலித் அர்ச்சகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். ஏடு கிருஷ்ணனின் சொந்த ஊர், திருச்சூர் மாவட்டம் கொரட்டி ஆகும். அவருடைய பெற்றோர் பி.கே.ரவி-லீலா.

அவர் சாஸ்திரங்கள் பற்றி 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளார். தன்னுடைய 15-வது வயதிலேயே, தனது வீட்டருகே உள்ள கோவிலில் அவர் பூஜை செய்ய தொடங்கினார். தற்போது, சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இதனை பாராட்டி திமுக செயல் தலைவர் செய்த டீவீட்டுக்கு கேரள முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அவரின் தந்தை கருணாநிதி முரசொலியில் எழுதுவதை போல., திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எல்லா சாதியும் அர்ச்சகர் சட்டத்தை நினைவு கூறி நீண்ட கடிதம் ஒன்றையும் திராவிட அடிப்படை கொள்கை சமுகநீதியை விளக்கியும் ஸ்டாலின் எழுதியுள்ளார்.

அரசியல் வர போகிறேன் என்று சொன்ன நடிகர் கமலஹாசன் இதனை வரவேற்று "திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும், தேவஸ்தானத்துக்கும், வைக்கம் வீரர்க்கு வணக்கம்" என்று ட்வீட் செய்துள்ளார்...

மற்றும் பல்வேறு இந்து மதத்தினர் இந்த முயற்சியை பாராட்டி சமூக வலைத்தளத்திலே தங்கள் ஆதரவை கேரளா முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர்.