இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76ன்படி சொலிசிட்டர் ஜெனரல் என்பவர் இந்திய அரசின் தலைமை ஆலோசகர் ஆவார். அவரே, உச்ச நீதிமன்றத்தின் பிரதான வழக்கறிஞர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரலுக்கு துணையாக இருப்பார் என்று விவரிக்கிறது.

Special Correspondent

மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற உடன், மேத்தா கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 2014-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அரசு ஒரு தரப்பாக இல்லாத வரை, அரசு வழக்கறிஞர்கள் தனியார் வழக்குகளில் ஆஜராகலாம். ஆனபோதிலும், 2014-ம் ஆண்டு மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், அரசு அல்லது அதன் அமைப்புகள் சம்பந்தப்படாத வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது. விதிவிலக்கான சூழல்களில் மட்டும், அதுபோன்ற வழக்குகளில் ஆஜராக அனுமதியளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று பிபிசி-யிடம் பேசிய அரசியலமைப்புச் சட்ட நிபுணர் சுபாஷ் காஷியப் தெரிவித்தார்.

என்.டி.டி.வி-க்கு அளித்த நேர்காணலில் மேத்தா, தான் அக்டோபர் 6-ஆம் தேதியே மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறியுள்ளார். அப்படியானால், the wire இணையதளத்தில் அந்த கட்டுரை வெளியாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே மேத்த மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற்று இருக்கிறார்.

இந்த 16000 மடங்கு வளர்ச்சி கட்டுரையை எழுதியரோகினி கருத்துக்கு...